மாஸ் ஹிட்டை உறுதி செய்த 83 டிரைலர்... குவியும் பாராட்டுக்கள்

சென்னை : கிரிக்கெட்டை மையமாகக் கொண்டும், இந்திய முன்னாள் கிரிக்கெட் கபில்தேவ்வின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும் எடுக்கப்பட்டுள்ள படம் 83. இதில் கபில்தேவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

ஜீவா, தஹிர் ராஜ் பாசின், பன்கஜ் திரிபாதி, சாதிக் சலீம், ஜதீன் சர்னா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் டிசம்பர் 24 ம் தேதி ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்து இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட்

1983 ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த போட்டி நடைபெற்ற போது இருந்த சூழ்நிலை, இந்திய கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், அதை அவர்கள் எதிர்கொண்டு, உலகக் கோப்பையை கைப்பற்றியது ஆகியவற்றை சொல்லி உள்ளது தான் 83 படத்தின் கதை.

83 பட டிரைலர்

83 பட டிரைலர்

இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. 3.49 நிமிடங்களைக் கொண்ட இந்த டிரைலர் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரைலர் வெளியிடப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே கிட்டதட்ட மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று விட்டது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை எப்போது பார்ப்போம் என ஆர்வமாக காத்திருப்பதாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரம்மாண்ட வெற்றி

பிரம்மாண்ட வெற்றி

டிரைலரிலேயே பிரம்மாண்ட வெற்றியை 83 படம் உறுதி செய்து விட்டதாக பலர் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் மிகப் பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை 83 படைக்கும் என பலர் கூறி வருகிறார்கள். 83 டிரைலர் வெளியீட்டை முன்னிட்டு 83Trailer, Thisis83 ஆகிய ஹாஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு, ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளன.

தீபிகா படுகோன் படம்

தீபிகா படுகோன் படம்

கபிர் கான் டைரக்ட் செய்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை கபீர் கான், விஷ்ணுவர்தன் இந்துரி, தீபிகா படுகோன், சஜித் நடியாத்வாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஒரு கிரிக்கெட் போட்டியின் மிக சிறப்பான, உணர்ச்சிகரமான தருணங்கள், அதே நாடே ஒன்று கூடி கொண்டாடும் விதம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக டிரைலரிலேயே காட்டி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X