twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னும் 6 மாசத்துல தியேட்டர் திறந்துடுவாங்க..அதுவரை வெயிட் பண்ணுவோம்..'83' தயாரிப்பாளர் தகவல்!

    By
    |

    சென்னை: இந்திய கிரிக்கெட் அணி, உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக வைத்து உருவாகியுள்ள '83' படம் OTT பிளாட்பார்மில் வெளியாவதாக வந்த தகவல் பற்றி தயாரிப்பாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    சினிமாவாகிறது பழம்பெரும் கின்னஸ் சாதனை நடிகையின் வாழ்க்கை.. இதிலும் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?சினிமாவாகிறது பழம்பெரும் கின்னஸ் சாதனை நடிகையின் வாழ்க்கை.. இதிலும் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்?

    இதை மையமாக வைத்து '83' என்ற பெயரில் திரைப்படம் உருவாகி உள்ளது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார்.

    தீபிகா படுகோன்

    தீபிகா படுகோன்

    மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர். சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக, ஜீவா நடித்துள்ளனர். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகி உள்ளது.

    ஜீவா தோற்றம்

    ஜீவா தோற்றம்

    இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்துரியின் விப்ரி மீடியா, அனுராக் காஷ்யப்பின் பான்டோம் பிலிம்ஸ், ரிலையன்ஸ், நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட், நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். சென்னையில் நடந்த இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், கபில்தேவ், ரன்வீர் சிங், ஜீவா, இயக்குனர் கபீர்கான் உட்பட படக் குழுவினர் கலந்துகொண்டனர்.

    வெளியாகவில்லை

    வெளியாகவில்லை

    இந்தப் படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் லாக்டவுன் காரணமாக வெளியாகவில்லை. இதனால் இந்த படத்தை நேரடியாக OTT பிளாட்பார்மில் வெளியிட இருப்பதாகவும் இதற்காக, ரூ.143 கோடிக்கு இந்தப் படத்தை, டிஜிட்டல் நிறுவனம் ஒன்று விலை பேசியதாகவும் செய்திகள் வெளியாயின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இதற்கு ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் விளக்கம் அளித்துள்ளது.

    6 மாதங்களில்

    6 மாதங்களில்

    'வெளியான அந்த செய்தியில் உண்மை இல்லை. இந்தப் படத்தை பெரிய திரைக்காகவே தயாரித்திருக்கிறோம். அதனால் OTT-யில் படத்தை இப்போது வெளியிடும் எண்ணமில்லை. இன்னும் நான்கு அல்லது ஆறு மாதங்களில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். அப்போதும் நிலைமை சரியாகவில்லை என்றால், OTT பற்றி யோசிப்போம்' என்று அதன் சிஐஓ, சிபாஷிஷ் சர்கார் தெரிவித்துள்ளார்.

    English summary
    Unconfirmed reports says that Ranveer Singh's '83' will be sold for release on an OTT platform before it opens in the theatres, have been denied by Reliance Entertainment.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X