இப்படி செய்யலாமா ரன்வீர் சிங்? இணையத்தில் வைரலாகும் நிர்வாண போட்டோ ஷூட்: சர்ச்சைகளும் விவாதங்களும்!
மும்பை: நடிகைகளுக்கே சவால் விடும் வகையில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் வெளியாகியுள்ளது.
'பேப்பர்' என்ற இதழுக்காக ரன்வீர் சிங் நிர்வாண போஸ் கொடுத்துள்ளது ரசிகைகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
ரன்வீர் சிங்கின் இந்த நிர்வாண போட்டோ ஷூட், இணையத்தில் வைரலாகி வருவதோடு சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. .
பாலிவுட்டில் இளம் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் ரன்வீர் சிங்கிற்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். மிகச் சாதாரணமாகவே இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வரும். இந்த நிலையில், ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளது அதிர்ச்சியையும் அதேநேரத்தில் புது விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகளுக்கு மட்டும் ஒரு சட்டமா?
பொதுவாகவே பிரபல பத்திரிகைகளுக்காக நடிகைகள் மட்டுமே ஆபாசமாகவும் நிர்வாணமாகவும் போட்டோ ஷூட் கொடுப்பது வழக்கம். நடிகர்களில் அரிதாக Burt Reynolds போன்று யாரேனும் சில நேரங்களில் நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார்கள். இப்போது நானும் இருக்கிறேன் என்ற மைன்ட் வாய்ஸ்ஸுடன் ரன்வீர் சிங்கும் நிர்வாண போட்டோ ஷூட் வண்டியில் ஏறியுள்ளார்.

ரசிகைகளுக்கு கொண்டாட்டம் தான்!
நடிகைகளின் நிர்வாண போட்டோக்களை ஆண் ரசிகர்கள் கொண்டாடுவதைப் போல, இப்போது ரன்வீரின் நிர்வாண புகைப்படங்களை ரசிகைகளும் கொண்டாடி வருகின்றனர். ஆண், பெண் என்ற வித்தியாசம் இருந்தாலும், ரசனைகளில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள முடியாது என்பது போல, ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட்டிற்கு ரசிகைகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தீபிகா மைன்ட் வாய்ஸ் என்ன?
பாலிவுட் ரசிகர்களை கண்டபடி சூடேற்றும் நடிகைகளில் தீபிகா படுகோனே முக்கியமானவர். ஆனால், இப்போது தனது கணவர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோ ஷூட் பத்தி, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதே மில்லியன் டாலர் கேள்விகளாக உள்ளன. இந்நேரம் அவரது மைன்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும் என, ரசிகர்களுக்குள் பெரும் விவாதமே நடந்து வருகிறது.

இனிமேல் எல்லாமே இப்படித்தான்
இதுவரை நிர்வாண போட்டோ ஷூட் நடத்துவதில் தயங்கி நின்ற நடிகர்களுக்கு, ரன்வீர் சிங் கதவை திறந்துள்ளார் என்றே சொல்லப்படுகிறது. ஒருபக்கம் நிர்வாணா போட்டோ ஷூட்டின் முன்னோடியாக மிலிந்த் சோமன் இருந்தாலும், ரன்வீர் சிங் அவரை பீட் செய்துவிடுவார் என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரன்வீர் சிங்கின் நிர்வாண ஷூட் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், அதுகுறித்து எழுந்துள்ள விவாதங்கள், இனிமேல் நிரவாண போட்டோ ஷூட்கள் எல்லாம் சர்வசாதாரணமாகி விடும் என்பது போல உள்ளது.


Click it and Unblock the Notifications











