வீல் சேரில் வந்த ரசிகைக்கு ரோசாப்பூ கொடுத்த நடிகர், முத்தம் கொடுத்த பெண்: வைரல் வீடியோ
Recommended Video
லண்டன்:லண்டனில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மூதாட்டி ஒருவருக்கு ரோஜாப்பூ கொடுத்தபோது எடுத்த வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 83 படத்தில் நடித்து வருகிறார். 1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது குறித்த படம் தான் 83. கபிர் கான் இயக்கி வரும் 83 படத்தில் கேப்டன் கபில் தேவாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரன்வீர். படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ரன்வீர் சிங் லண்டனில் உள்ள சவுத் ஹால் பகுதிக்கு சென்றார். அவரை பார்த்த ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தார்கள். அப்பொழுது தன்னை காண வீல் சேரில் வந்திருந்த மூதாட்டியை பார்த்து ரன்வீர் சிங் நெகிழ்ந்துவிட்டார்.
இதையடுத்து ரன்வீர் தன் கையில் வைத்திருந்து ரோஜாப்பூவை அந்த மூதாட்டியிடம் கொடுக்க அவரோ ரன்வீரின் கன்னத்தில் முத்தமிட்டார். பதிலுக்கு ரன்வீர் மூதாட்டியின் கையில் முத்தமிட்டு அவரை கட்டிப்பிடித்தார்.
இந்த சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தான் ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் அந்த பந்தா இல்லாமல் ரசிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைக்கும் ஒரு நல்ல மனிதர் ரன்வீர் சிங் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த பிறகு ரன்வீர் மீதான மரியாதை அதிகரித்துவிட்டது, வீ லவ் யூ என்று ரசிகர்கள் பெருமையுடன் கூறியுள்ளனர். முன்னதாக 83 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரன்வீர் சிங்கின் பிறந்தநாள் அன்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் ரன்வீர் சிங்கின் மனைவியாக அவரின் நிஜ மனைவி தீபிகா படுகோனே நடிக்கிறார். சாப்பக் படத்தில் பிசியாக இருந்த தீபிகா தற்போது 83 படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.
83 படத்தில் நம்ம ஜீவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











