சிக்கலில் ரன்வீர் சிங்..நிர்வாண போட்டோஷூட் நடத்தியதாக மும்பை போலீஸ் வழக்குப்பதிவு
மும்பை : பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அவர் மீது அடுத்தடுத்து வழங்குகள் பாய்ந்து வருகின்றன.
ரன்வீர் சிங் 2010ம் ஆண்டு பேண்ட் சர்மா பாராத் என்ற இந்தி திரைப்படத்தின் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து, லூட்டேரா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், சிம்பா, கல்லி பாய், 83 உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ரன்வீர் சிங்
ரன்வீர் சிங்கின் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் 83 திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரன்வீர் சிங். தற்போது ஜெயேஷ்பாய் ஜோர்தார், சர்க்கஸ், ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். மேலும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் கபூர் நாயகனாக நடிக்க உள்ளார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

நிர்வாணமாக போஸ்
நடிப்பை தாண்டி மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது ரன்வீர் பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். ரன்வீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்ப்புகள் கிளப்பி உள்ளது.

கடும் எதிர்ப்பு
பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான மிமி சக்ரவர்த்தி, ரன்வீர் சிங்கின் புகைப்படங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை போட்டுள்ளார். அதில், ஒரு பெண் இப்படி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தால், இந்த சமுதாயம் அதை ஏற்றுக்கொள்ளுமா? இல்லை அந்த பெண்ணுக்குத்தான் இத்தகைய பாராட்டு கிடைக்குமா? என கேட்டிருந்தார்.

சிக்கலில் ரன்வீர் சிங்
இந்நிலையில், ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் காவல்நிலையத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மீது புகார் கொடுத்துள்ளது. அந்த புகார் மனுவில், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம், ஆனால் நீங்கள் சமூகத்தில் நிர்வாணமாக உலாவ வேண்டும் என்று அர்த்தமல்ல.

மலிவான விளம்பரம்
இந்தியாவில் நடிகர்கள் நாயக் என்று அழைக்கப்படுகிறார்கள், இந்திய மக்கள் சில பகுதிகளில் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். இந்தியா மற்றும் மக்கள் அவர்களை கடவுளாக கூட வணங்குகிறார்கள். இதுபோன்ற செயல்களைச் செய்வதன் மூலம் ரன்வீர் சிங் போன்ற நடிகர்கள் மக்களின் உணர்வுகளைப் பணயம் வைத்து மலிவான விளம்பரத்தைப் பெற முயற்சிப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது. இதைடுத்து, 67A பிரிவின் கீழ் இந்திய தண்டனைச் சட்டம் 292, 293, 354 மற்றும் 509 ஆகிய பல்வேறு பிரிவுகளில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக மும்பை போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











