கோலியை பின்னுக்குத்தள்ளி ரன்வீர் சிங் NO 1... ஆனாலும் தீபிகா படுகோனிடம் அது எடுபடவில்லையே!
மும்பை: பலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் விளம்பரங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார்.
இதனால், இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்னர் நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், இந்தியளவில் அதிக பிரபலமான செலிபிரிட்டி என்ற பட்டியலில் விரோட் கோலியை முந்திய ரன்வீர் சிங், அவரது மனைவி தீபிகா படுகோனேவிடம் அசிங்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

2022ம் ஆண்டு பிரபலங்கள்
2010ம் ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங், 12 ஆண்டுகளில் டாப் மோஸ்ட் செலிபிரிட்டியாக மாறிவிட்டார். குறிப்பாக தீபிகா படுகோவேவை திருமணம் செய்துகொண்ட பின்னர் ரன்வீரின் மார்க்கெட் வேல்யூ வேற லெவலுக்குச் சென்றது. அதுமட்டும் இல்லாமல் சில மாதங்களுக்கு முன்னர் நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி ரசிகைகளை கலங்கடித்தார். இந்நிலையில், 2022ம் ஆண்டின் அதிக பிரபலமான செலிபிரிட்டியாக ரன்வீர் சிங் தேர்வாகியுள்ளார்.

விராட் கோலியை முந்தினார்
இந்திய அளவில் 2022ம் ஆண்டின் பிரபலங்கள் என்ற பட்டியலை கிரால் ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சோசியல் மீடியாவில் பிரபலங்கள் மூலம் விளம்பரப்படுத்தும் பொருட்களின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாக வைத்து 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவின் பிரபலமான நபராக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இதில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சிங் மார்க்கெட் வேல்யூ
ரன்வீர் சிங், கோலியைத் தொடர்ந்து 3வது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் காணப்படுகிறார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா என தென்னிந்திய நடிகர், நடிகைகளின் பெயரும் இப்பட்டியலில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. ஆலியா பட் 4வது இடத்தில் இருப்பதோடு மதிப்பு வாய்ந்த பெண் பிரபலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் முதல் 10 இடங்களில் அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான் அகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இதில், ரன்வீர் சிங்கின் விளம்பர சந்தை மதிப்பு 1499 கோடியாகவும், கோலிக்கு 1460 கோடியாகவும் இருப்பதாக சொலப்பட்டுள்ளது.

தீபிகா படுகோன் செய்த சம்பவம்
ரன்வீர் சிங் இந்தளவுக்கு பிரபலமாக இருந்தாலும் அவரது மனைவி தீபிகா படுகோனேவிடம் செல்ஃப் எடுக்க முடியாமல் திணறியுள்ளார். மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். அப்போது இருவரும் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தபோது தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர் சிங். ஆனால், தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கின் கையை பிடிக்காமல் விட்டுவிட்டார்.

ட்ரெண்டாகும் வீடியோ
அதுமட்டும் இல்லாமல் ரன்வீர் சிங்கை முகம் கொடுத்துக் கூட பார்க்கவே இல்லை. இதனால் கடுப்பான ரன்வீர் சிங் வேகவேகமாக முன்னால் நடந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ ட்வீட்டர் உட்பட சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. மேலும் இருவருக்கும் இடையே எதோ பிரச்சினை என்றும், விவாகரத்து செய்யப் போகிறார்களா எனவும் கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











