ஒரே ஒரு படம் ரூ.325 கோடி சம்பளம்.. பாக்ஸ் ஆபீஸையே அலறவிட்ட ரன்வீர் சிங்.. துரந்தர் பிசினஸ் சீக்ரெட்!

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நடிப்பில் வெளியாகிப் பட்டிதொட்டியெங்கும் சக்கைப்போடு போடு போட்ட திரைப்படம் தான் 'துரந்தர்'. அதிரடி ஆக்ஷன் டிராமா திரைப்படம் இந்த படம் இந்தியத் திரை உலக வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்து, பல கோடிகளைக் குவித்தது.
ஆனால், இப்போது சோசியல் மீடியாவில் படத்தின் வெற்றியைத் தாண்டி, இந்தப் படத்திற்காக நடிகர் ரன்வீர் சிங் வாங்கியுள்ள சம்பளம் தான் செம ஹாட் டாபிக்காக மாறி உள்ளது.

325 கோடி சம்பாதித்த ரன்வீர் சிங்: இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 'துரந்தர்' படத்தின் மூலம் நடிகர் ரன்வீர் சிங் மட்டுமே சுமார் 325 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. ஒரு படத்திற்கு இவ்வளவு பெரிய தொகையா என்று ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே வியப்பில் வாயை பிளந்து நிற்கிறது. இதற்குப் பின்னால் ரன்வீர் சிங் செய்த ஒரு மாஸான பிசினஸ் ட்ரிக் இருக்கிறது. அதாவது இந்த படத்திற்காக ரன்வீர் சிங் வழக்கமான முறையில் எந்த ஒரு குறிப்பிட்ட ஃபிக்ஸட் சம்பளத்தையும் வாங்கவில்லையாம். மாறாக, படத்தின் லாபத்தில் தனக்குப் பங்கு வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இந்த படத்தில் நடித்துள்ளார்.

Dhurandhar2 Ranveer Singh Salary
Photo Credit:

ரிஸ்க் எடுத்த ரன்வீர்: படத்தின் தயாரிப்புச் செலவு எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு எகிறியபோது, ரன்வீர் சிங் தனது சொந்தப் பணத்தையும் இந்தத் படத்தில் முதலீடு செய்து ஒரு தயாரிப்பாளராகவும் ரிஸ்க் எடுத்துள்ளார். இவருடைய இந்த அசாத்திய நம்பிக்கைக்குத் தற்போது பாக்ஸ் ஆபீஸ் மிகப்பெரிய பரிசை அள்ளிக் கொடுத்துள்ளது. தியேட்டர்களில் இருந்து கிடைத்த வசூல் பங்கு மட்டுமின்றி, படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் மற்றும் மியூசிக் உரிமைகள் எனப் பல்வேறு வழிகளில் விற்கப்பட்ட பிசினஸ் லாபத்திலும் ரன்வீர் சிங்கிற்குப் பெரும் பங்கு கிடைத்துள்ளது. இதன் மூலமே அவரது ஒட்டுமொத்த வருவாய் ரூ 325 கோடியைத் தொட்டுள்ளது. ரன்வீர் சிங்கின் ஒட்டுமொத்த சினிமா கேரியரிலேயே 'துரந்தர்' திரைப்படம் தான் அவருக்கு மிகக் கூடுதலான லாபத்தையும், புகழையும் தேடித்தந்த படமாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X