கோடியில் சம்பளம்.. 8 மணி நேர நடிப்பா? தீபிகா கோரிக்கைக்கு கணவர் ரன்வீர் சிங் மறைமுக தாக்கு!

சென்னை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் சில மாதங்களுக்கு முன், படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிவேன் என்று கூறியது பெரும் பேசுபொருளானது. இது குறித்து பலவிதமான விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், தீபிகா படுகோனின் கணவரான ரன்பீர் சிங், 8 மணி நேர ஷிஃப்ட் கோரிக்கை நியாயமற்றது என்றார்.

ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி உள்ள துரந்தர் படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சஞ்சய் தத், அக்‌ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம், டிசம்பர் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ள வருகிறது. துரந்தர் படம் வெற்றி பெற்றது குறித்து இந்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரன்வீர் சிங்.

Ranveer Singh Dhurandhar Deepika Padukone
Photo Credit:

ரன்வீர் சிங் பேட்டி: அதில், 'துரந்தர்' படத்தின் வெற்றி குறித்துப் பேசிய அவர், படத்தின் படப்பிடிப்பு பல மணி நேரமாக நடந்தது. என்னால் 8 மணி நேரம் மட்டும் தான் நடிக்க முடியும் என்று சொல்ல முடியாது. 8 மணி நேர ஷிஃப்ட்டில் துரந்தர் போன்ற ஒரு படத்தை உருவாக்க முடியாது, மேலும் நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்க கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் அப்படி இருக்கும் போது, எட்டு மணி நேரம் மட்டும் தான் நடிப்பேன் என்று சொல்வதை ஏற்றுகொள்ள முடியாது, ​​தீபிகா படுகோனின் 8 மணி நேர ஷிஃப்ட் கோரிக்கை நியாயமற்றது என்றார்.

மறைமுக தாக்கு: 'துரந்தர்' படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர், படப்பிடிப்பு தினமும் 16 மணி நேரம் நடைபெற்றது. அதில் ரன்வீர் கபூர் சோர்வின்றி, புகாரும் எதுவும் சொல்லாமல் நடித்தார். இது ரன்வீரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும், தொழில் மீதான பக்தியை காட்டுகிறது. தினமும் 16 மணி நேரம் எந்தக் குறையும் இன்றி,அவரிடம் என்ன எதிர்பார்க்கப்பட்டதோ, அதை அவர் முழுத் திறமையுடன் வழங்கினார். மேலும், "ரன்வீர் மட்டுமல்லாது, முழு 'துரந்தர்' படக்குழுவும் கடினமாக உழைத்தனர் என பேசி இருந்தார்.

நியாயமற்றது: தீபிகா படுகோனே குழந்தை பிறப்புக்கு பிறகு தன்னுடைய பணி நேரம், சம்பளம் போன்ற விஷயங்களில் கறாராக இருக்கிறார். தீபிகா படுகோனே பிரபாஸின் ஸ்பிரிட் படத்திற்கு ஒப்பந்தமான நிலையில், 8 மணி நேரப் பணி நேரம் பற்றி பேசியதால் இயக்குநருக்கும் தீபிகாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஸ்பிரிட் படத்தில் இருந்து வெளியேறினார். தீபிகாவின் எட்டு மணி நேர வேலை குறித்து பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தீபிகா படுகோனின் கணவரான ரன்பீர் சிங், அவரின் 8 மணி நேர ஷிஃப்ட் கோரிக்கை நியாயமற்றது என பேசி உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதும.

More from Filmibeat

Read more about: deepika padukone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X