அந்த நடிகர் இல்லையாம்.. அல்லு அர்ஜுன் பிளாக்பஸ்டர் ரீமேக்கில் இவர் தான் ஹீரோவாம்.. செம போங்க!
ஹைதராபாத்: த்ரிவிக்ரம் இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அலா வைகுந்தபுறமுலோ படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகப் போகிறதாம்.
Recommended Video
அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ், தபு, ஜெய்ராம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது அந்த படம்.
மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

எம்.ஜி.ஆர் காலத்து கதை
இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுறமுலோ இந்த ஆண்டு வெளியாகி 250 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. பணக்கார வீட்டுப் பிள்ளை ஏழை வீட்டில் வளர்வதும், ஏழை வீட்டுப் பிள்ளை பணக்கார வீட்டில் வளர்வதும் என்ற எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை பட கான்செப்ட் தான் இந்த படம். இது போன்று பல கதைகள் இந்திய சினிமாவில் வெளியாகி இருந்தாலும், அசத்தலான திரைக்கதையால் இந்த படம் வெற்றிப் பெற்றது.

ரீமேக் செய்ய போட்டி
இந்த படத்தை ரீமேக் செய்ய கோலிவுட், பாலிவுட் என எக்கச்சக்க போட்டிகள் நிலவி வருகின்றன. கோலிவுட்டில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு இந்த படத்தை ரீமேக் செய்ய போட்டி போட்டு வருவதாகவும், வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் அலா வைகுந்தபுறமுலோ படத்தின் உரிமையை வாங்கி உள்ளதாகவும் சில வாரங்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

கார்த்திக் ஆர்யான்
மேலும், பாலிவுட்டிலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட கிராக்கிகள் குவிய, இளம் நடிகர் கார்த்திக் ஆர்யான் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. கடந்த ஆண்டு அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான கபீர் சிங் பாலிவுட்டில் கல்லா கட்டிய நிலையில், தெலுங்கு பட ரீமேக்குகள் பாலிவுட் திரையுலகம் போட்டி போட்டு வருகின்றது.

இவர் தான் ஹீரோவாம்
இந்நிலையில், தற்போது அந்த படத்தின் ரீமேக்கில் கார்த்திக் ஆர்யான் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கப் போவதாகவும் புதிய தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. உலக கோப்பையை இந்தியா வென்ற '83' படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கும் தீபிகா படுகோனேவின் கணவர், இந்த படத்தில் நடித்தால் நல்லாத்தான் இருக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











