பப்ளிக் நிகழ்ச்சியில்.. கணவர் ரன்வீர் சிங் கையை பிடிக்க மறுத்த தீபிகா படுகோனே.. என்னாச்சு!
மும்பை : விருது வழங்கும் நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்கின் கையைப் பிடிக்க மறுத்ததால் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக நெட்டிசன்கள் இணையத்தில் புயலை கிளப்பி உள்ளனர்.
நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு பெற்றோரின் சம்மதத்துடன் இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தற்போது மும்பையில் ரன்வீரின் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோனே பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.

தீபிகா படுகோனே, ரன்வீர் சிங்
மும்பையில் நேற்று இந்திய ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், பல பாலிவுட் பிரபலங்களும், பல விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு நட்சத்திர தம்பதிகளான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் மற்றும் தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனேவும் கலந்து கொண்டார்.

ரன்வீரை புறக்கணித்த தீபிகா
இந்த விழாவிற்காக தீபிகா கருப்பு நிறத்தில் புடவையும்,ரன்வீர் தீபிகாவுக்கு மேட்ச்சாக கருப்பு நிறத்தில் ஷூட் கோட் அணிந்திருந்தார். காரை விட்டு இறங்கிய தீபிகா, ரெட் கார்பெட்டில் நடப்பதற்கு முன் தன் ஆடையை சரி செய்து கொண்டார். காரில் இருந்து இறங்கி ரன்வீர் சிங், தீபிகாவுக்காக காத்திருந்து, கை பிடித்துக்கொண்டு ரெட் கார்பெட்டில் நடக்க முயன்றார். இதற்காக தீபிகாவிடம் கையை நீட்டியபடி நின்றார் ரன்வீர. ஆனால் தீபிகா ரன்பீரை பார்க்காதது போல சிவப்பு கம்பளத்தில் தனியாக நடந்தார்.

விவாகரத்து முடிவா?
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து நெட்டிசன்ஸ் கவலை அடைந்தனர். இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் பரவி வரும் நிலையில், தீபிகா வேண்டும் என்றே ரன்வீர் சிங்கின் கையை பிடிக்க மறுத்துள்ளது சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ரன்வீர் அடுத்த படங்களில்
ரன்வீர் சிங் தற்போது ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும், கல்லி பாய் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் அடுத்த மாதம் தியேட்டரில் வெளியாக உள்ளது. மேலும், ரன்வீர் சிங் கடைசியாக சர்க்கஸ் படத்தில் நடித்துள்ளார். இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பூஜா ஹெக்டே கதாநாயகிகளாக நடித்துள்ளார்.

பிளாக் பஸ்டர் ஹிட் பதான்
அதேபோல தீபிகா படுகோனே, பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இப்படம் பல சர்ச்சைக்கு இடையே ஜனவரி 25 திரையரங்கில் வெளியா வசூலை அள்ளியது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











