தலைவர் 171 படத்துல அந்த பாலிவுட் ஹீரோவா?.. அப்போ அதே ஹாலிவுட் படத்தோட ரீமேக் தானா?

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள தலைவர் 171 ஆவது படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து வேட்டையன் படத்திலும் மல்டி ஸ்டார் நடிகர்களை போட்டு பெரிய அளவில் தனது படங்களை உருவாக்கி வருகிறார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் எனக்கு ஆசை இந்தியாவில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இருந்து வரும் நிலையில் அப்படி ஒரு ஆஃபர் கிடைத்தால் யாருமே நோ சொல்ல மாட்டார்கள்.

Ranveer Singh will act against Rajinikanth in Thalaivar 171

இந்நிலையில் தலைவர் 171 வது படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லோகேஷ் கனகராஜ்: தளபதி விஜய்யின் லியோ படத்தை முடித்துவிட்ட நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 வது படத்தை இயக்க காத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளியான இனிமேல் பாடல் ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கமல்ஹாசன் தயாரிப்பில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ரொமான்ஸ் செய்து லோகேஷ் கனகராஜ் நடித்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிப்பாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ள நிலையில், முதலில் தலைவர் 171 படத்தை இயக்குவது தான் முதல் வேலை என முடிவெடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

தலைவர் 171 டீசர்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் அறிமுக டீசர் வீடியோ வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்காக சமீபத்தில் பிரத்தியேகமாக படப்பிடிப்பு ஒன்றையும் லோகேஷ் கனகராஜ் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவும் மல்டி ஸ்டார் ஸ்டார் படம் தான்: நாடு முழுவதும் மல்டி ஸ்டார் படங்கள் அதிக லாபத்தைக் கொடுத்த ஒரு நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திலிருந்து மல்டி ஸ்டார் கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷராஃப் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். அடுத்து உருவாகி வரும் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தலைவர் 171 வது படமும் மல்டி ஸ்டார் படம் தான் என்றும் பல பிரபல நடிகர்களை இந்த படத்திற்குள் கொண்டு வரும் முயற்சியில் லோகேஷ் தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

சிவகார்த்திகேயன், லாரன்ஸ்: தலைவர் 171 வது படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வரவில்லை. இதில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஒருவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீபிகா படுகோன் கணவர்: ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோன் இணைந்து நடித்த நிலையில், தற்போது தலைவர் 171 வது படத்தில் அவரது கணவர் ரன்வீர் சிங் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக பரபரப்பு தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக அசுரத்தனமான நடிப்பை ரன்வீர் சிங் வெளிப்படுத்தியிருப்பார்.

ஹாலிவுட் படத்தின் தழுவலா?: 2013 ஆம் ஆண்டு வெளியான The Purge எனும் ஹாலிவுட் படத்தின் தகவலாக இந்த படம் உருவாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் எனும் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போலவே இந்த படத்தை உருவாக்க காத்திருக்கிறாரா லோகேஷ் கனகராஜ் என்கிற கேள்வியும் அதில் சைக்கோ போல ஒருத்தர் அசத்தலாக நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு தான் ரன்வீர் சிங் தேர்வாகி இருக்கிறாரா என்றும் ஏகப்பட்ட யூகங்கள் கிளம்பியுள்ளன. ஒரு ஏப்ரல் 22-ஆம் தேதி தலைவர் 171 வது படத்தின் டைட்டில் மற்றும் மற்ற விஷயங்கள் தெரியவரும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X