Dhurandhar 2 Trailer: பின்வாங்குற ஐடியாவே இல்லை.. ப்ரூட்டல் அட்டாக் செய்ய வரும் துரந்தர் 2.. டிரைலர்!
சென்னை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் 2 படம் திட்டமிட்டபடியே வரும் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ரத்தம் தெறிக்க தெறிக்க Dhurandhar 2 Revenge டிரைலர் வெளியாகி உள்ளது.
கேஜிஎஃப் ஹீரோ யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் போர் காரணமாக ரிலீஸ் தேதியை ஜூன் 4க்கு தள்ளிப்போடுவதாக அறிவித்தனர்.

ஆனால், துரந்தர் 2 படத்துடன் கிளாஷ் விட்டால் கண்டிப்பாக வட இந்தியாவில் வரும் மிகப்பெரிய வசூல் பாதிக்கும் என்பதால் தான் டாக்ஸிக் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக ரன்வீர் சிங் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பாகிஸ்தானே பத்திக்கிட்டு எரியுது: துரந்தர் முதல் பாகமே ராவான ஆக்ஷன் காட்சிகளில் ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியிருக்கும். இந்நிலையில், துரந்தர் 2 படத்தில் பாகிஸ்தானே ரஹ்மான் டக்கெயிட் மறைவுக்குப் பிறகு பத்திக்கிட்டு எரிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஹீரோ ரன்வீர் சிங் நெருப்பு இரும்பு பந்தை வைத்துக் கொண்டு எதிரிகளை கொடூரமாக தாக்கிக் கொள்ளும் காட்சிகளும், இன்னொரு புறம் எஸ்ஐ கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சய் தத் வேட்டையாடும் காட்சிகளும் அர்ஜுன் ராம்பால் மெயின் வில்லனாக மாறுவதும் சாரா அர்ஜுன் துப்பாக்கியை எடுத்து ரன்வீர் சிங்கை குறிவைப்பது போன்ற காட்சிகள் டிரைலரில் இடம்பெற்று ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியுள்ளன.
மார்ச் 19 ரிலீஸ்: துரந்தர் திரைப்படமே மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்பட்டது. அதனால், அந்த பிரச்னை இந்த படத்துக்கு இல்லை என்பதால் திட்டமிட்டபடி மார்ச் 19ம் தேதியே துரந்தர் 2 வெளியாகிறது. முதல் பாகம் இந்தியில் மட்டுமே வெளியான நிலையிலும் 1000 கோடி வசூலை சாத்தியமாக்கியது. இந்நிலையில் 2வது பாதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாவது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் துரந்தர் 2 தியேட்டர்களுக்கு மீண்டும் மக்களை கொண்டு வரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











