Dhurandhar2 Box office: வெறித்தனமாக வசூல் வேட்டை.. துரந்தர் 2 படத்தின் 6நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: ஆதித்யா தார் இயக்கிய துரந்தர் 2 ஆறாவது நாளில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் அதிரடியான வசூலை அள்ளி 'Chhaava' படத்தை பின்னுக்குத் தள்ளியது. இந்திய சினிமாவில் அதிக வசூலை அள்ளிய முதல் டாப் பத்து படங்களில் பட்டியலில் துரந்தர் 2 இணைய உள்ளது.
இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங்,சாரா அர்ஜூன் நடித்த துரந்தர் படத்தின் முதல்பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் 1300 கோடியை வசூலித்தது. இதையடுத்து 'Dhurandhar: The Revenge' படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. Sacnilk' இணையதளத்தின் தகவல்படி, செவ்வாய்க்கிழமையன்று, நேற்று இந்த படம் இந்தியா முழுவதும் 20,412 காட்சிகளில் திரையிடப்பட்டு, ரூ. 56.55 கோடி வசூலைப்பதிவு செய்தது. இதன் மூலம், இப்படத்தின் மொத்த உள்நாட்டு வசூல் ரூ. 575.67 கோடியாகவும், மொத்த வசூல் ரூ. 687.43 கோடியாகவும் அதிகரித்தது. படம் வெளியான 6 நாட்களிலேயே உலக அளவில் ரூ. 919 கோடியை வசூலித்துள்ளது.

தாறுமாறான வசூல்: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1, ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 852.36 கோடியை வசூலித்தது. அதே போல 'Stree 2' ரூ. 857.15 கோடியும், 'Chhaava' படம் ரூ. 601.54 கோடியை வசூலித்து இருந்தன. அந்த சாதனையை தற்போது துரந்தர் 2 திரைப்படம் முறியடித்து, இந்தியாவில் அதிகபட்ச வசூல் ஈட்டிய முதல் டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் ''துரந்தர் 2' திரைப்படம் இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் விரைவில் துரந்தர் 2 திரைப்படம் உலகளவில் ரூ. 1,000 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த 'Pushpa 2: The Rule' திரைப்படம், வெறும் ஏழு நாட்களில் இந்தச் சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் என வெகுவாக பாராட்டி இருந்தார்.


Click it and Unblock the Notifications











