Dhurandhar Box Office: தனுஷ் பட வசூலுக்கு வேட்டு வைத்த துரந்தர்.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

மும்பை: ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்‌ஷய் கன்னா மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான துரந்தர் திரைப்படம் ஆக்‌ஷன் விரும்பிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் ஸ்பை ஏஜென்ட் பாணியில் பல படங்கள் வந்துள்ள நிலையில், இந்த துரந்தர் திரைப்படமும் அதே கதையை கொண்டு உருவாகி இருக்கிறது.

இந்தியாவில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு பிரச்னையை தூண்ட பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் நடத்தும் சதி திட்டத்தை நாயகன் ரன்வீர் சிங் முறியடித்தாரா? இல்லையா? என்பது தான் கதை.

Ranveer Singh s Dhurandhar beats Dhanush s Tere Ishk Mein on Day 1 at Box Office
Photo Credit:

கடந்த வாரம் இந்தியில் வெளியான தனுஷின் தேரே இஷ்க் மே திரைப்படம் ரன்வீர் சிங்கின் மெகா பட்ஜெட் படமான துரந்தர் ரிலீஸ் ஆன நிலையில், ஏகப்பட்ட திரையரங்குகளை இழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அந்த படத்தின் வசூலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..

துரந்தர் முதல் நாள் வசூல்: ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் முதல் நாளில் அதிகப்படியாக 15 முதல் 20 கோடி தான் இந்தியாவில் வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணித்த கணிப்பை எல்லாம் தவிடு பொடியாக்கி முதல் நாளில் சையாரா படத்தை விட அதிக வசூலை இந்தியில் அள்ளி சாதனை படைத்துள்ளது. 27 கோடி ரூபாய் வசூலை முதல் நாளே துரந்தர் திரைப்படம் அள்ளி பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்துள்ளது.

Ranveer Singh s Dhurandhar beats Dhanush s Tere Ishk Mein on Day 1 at Box Office
Photo Credit:

தேரே இஷ்க் மே 8வது நாள் வசூல்: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான தேரே இஷ்க் மே திரைப்படம் 8வது நாளான நேற்று அதிரடியாக சரிந்து வெறும் 3.65 கோடி தான் வசூல் செய்தது. சனி மற்றும் ஞாயிறு என இந்த வார விடுமுறை நாட்களில் துரந்தர் திரைப்படத்துக்குத்தான் அதிக டிக்கெட்டுகள் புக்காகி வருகின்றன. தனுஷின் இந்தி படமான தேரே இஷ்க் மே திரைப்படம் சனி, ஞாயிறு மீண்டும் ரசிகர்களை கவர்ந்தால் மட்டுமே இந்தியாவில் 100 கோடி வசூலை ஈட்டும் என்று கூறுகின்றனர். இதுவரை 87.30 கோடி வசூலை இந்தியாவில் ஈட்டியுள்ளதாக சாக்னிக் தகவல் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X