பாகிஸ்தானுக்கு எதிரான கருத்து.. ரன்வீர் சிங் படத்திற்கு அரபு நாடுகளில் தடை.. வசூலை அள்ளும் துரந்தர்!
மும்பை: இந்தி திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரன்வீர் சிங் இந்தி திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரன்வீர் சிங். இவர் துரந்தர் என்ற படத்தில் நடித்துள்ளார். திரில்லர் படமான இது கடந்த 5ம் தேதி இந்தியாவில் ரிலீல் ஆனநிலையில், 6 அரபு நாடுகளில் ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் வெளியிட தடைவிதிக்கப்பட்ட போதும் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி உள்ள துரந்தர் திரைப்படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா, ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால், மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். திரில்லர் திரைப்படமான இப்படம், டிசம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாறு படைத்துள்ளது. ராஜமௌலியின் பாகுபலி 2 படத்தின் நீண்ட நாள் சாதனையை துருந்தர் திரைப்படம் முறியடித்துள்ளது. இந்திய பாக்ஸ் ஆபிசியில் இத்திரைப்படம் ஒன்பது நாளில் சுமார் ரூ.290 கோடியை வசூலித்துள்ளது. துருந்தர் படம் வெளியான முதல் நாளில் ரூ.32 கோடி வசூலித்தது.

ரன்வீர் சிங்கின் துரந்தர்: இந்தியாவிலும் வட அமெரிக்காவிலும் பாராட்டுகளையும் வசூலையும் குவித்து வரும் துருந்தர் படம், மத்திய கிழக்கு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கில பத்திரிகையான இந்தியா டுடே வெளியிட்டுள்ள தகவலின்படி, பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் இந்த படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றதால் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
6 நாடுகளில் தடை: வளைகுடா நாடுகளில் படத்தை வெளியீடு படக்குழு பல முயற்சிகள் எடுத்தும், அதிகாரிகள் அனுமதி தர முன்வரவில்லை. படத்தின் கருப்பொருள் பாகிஸ்தானுக்கு எதிரானதாக கருதப்பட்டதால், எந்த நாட்டிலும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த விவகாரம், எல்லை தாண்டிய அரசியல் பின்னணியை கொண்ட இந்திய திரைப்படங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எதிர்கொள்ளும் சவால்களை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











