Real Thug: ஜோடிக்கப்பட்ட கஞ்சா வழக்கு? அந்த பையனுக்கு பயம் இல்ல.. கெத்து குறையாமல் நடந்து கொண்ட வேடன்

சென்னை: கேரளாவைச் சேர்ந்த ராப் பாடகர் வேடன் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே உள்ளது. குறிப்பாக இவரது பல வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இப்படியான நிலையில் ராப் பாடகர் வேடனின் வீடியோக்களை அல்லது அவர் குறித்த தகவல்களை பலரும் பகிர்ந்து வருகையில் அவரது முரட்டு தைரியம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது செய்தியாளர்கள் வேடனைக் கேள்வி கேட்க சூழ்ந்து கொள்கிறார்கள். ஆனால் அப்போது அவர் மிகவும் தைரியமாக செய்தியாளர்களை கையாண்டது, Real Thug என்று உணர வைக்கிறது எனலாம்.

வேடன் ராப் பாடகர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இவரது ராப் பாடல்கள் அனைத்துமே ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைச் சொல்லுகிற, அவர்களின் விடுதலையைப் பேசுகிற, ஆதிக்கத்தை துவம்சம் செய்கிற தொணியில் உள்ளது. இவரது பாடல்களுக்கு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ஆர்.எஸ். எஸ் மற்றும் பாஜகவினரிடையே எதிர்ப்பைப் பெற்று வருகிறது.

ராப் பாடகர் வேடன் அவரது வீட்டில் 6 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக காவல்துறை அவரைக் கைது செய்தது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஜாமீன் வாங்கிய சில மணி நேரங்களில் அவரது கழுத்தில் அணிந்திருப்பது புலிப் பல் என்றும், அதனை அவர் வேட்டையாடி புலிப் பல்லை அணிந்துள்ளார் என்றும் கூறி கைது செய்தார்கள்.

Rap Singer Vedan Brave Attitude Real Thug Moment When Police Arrest Him Original
Photo Credit:

ஜோடிக்கப்பட்ட வழக்குகள்: வேடன் இது போல அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதை பார்த்த பலரும் வேடன் மீது வழக்குகள் ஜோடிக்கப்படுகிறது என்று பேசி வந்தார்கள். ஆனால் இந்த வழக்குகளை எல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்த வேடன், காவல் துறையைப் பார்த்து பயப்படவில்லை. மேலும், கஞ்சா வழக்கில் தன்னைக் கைது செய்கிறார்கள் என தனது முகத்தை மூடிக் கொள்ளாமல், தைரியமாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

ரியல் தக்: பத்திரிகையாளர்களைப் பார்த்ததும், கொஞ்சம் கூட தயங்காமல், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் முன்னர், வேடன் தனது கேள்விகளை மிகவும் தைரியமாக கேட்டார். அதாவது, பாடல்கள் கேட்டீர்களா என்று கேட்கிறார், அதற்கு பத்திரிகையாளர், கேட்டேன் என்று பதில் அளிக்கிறார். அடுத்து பாடல்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்கிறார், அதற்கும் பத்திரிகையாளர் நன்றாக உள்ளது என்கிறார். வரிகள் எப்படி உள்ளது என்று கேட்கிறார், அதற்கு பத்திரிகையளரோ, ' அடிபொலியாக' உள்ளது என்கிறார். உடனே அடுத்தும் நல்ல நல்ல பாடல்கள் வரும் என்று கூறுகிறார். இவரது இந்த நடவடிக்கையை ரியல் தக் என்று கூறலாம்.

Rap Singer Vedan Brave Attitude Real Thug Moment When Police Arrest Him Original
Photo Credit:

சமரசமற்ற அரசியல்: இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதற்கு இணைய வாசி ஒருவர், " தமிழனா இப்படி இருக்கணும்" என்று பதிவிட்டுள்ளார். ஆனால் ஒரு கலைஞனான அதுவும் முற்போக்கு அரசியல் பேசுகிற, ஆதிக்கத்தை வலிமையாக எதிர்க்கிற வேடனின் தைரியுமும் துணிச்சலும் பல மிகப்பெரிய திரைப்பிரபலங்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேடன் தனது அரசியலில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பது அவரது வெற்றி மட்டும் இல்லாமல், சமூக நல்லிணக்கத்திற்கான உறுதி பாடாகவும் பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X