பட ஆசை காட்டி மாடல் அழகி பலாத்காரம்: தயாரிப்பாளர் மீது வழக்கு
எர்ணாகுளம்: பட வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி மாடல் அழகியை பலாத்காரம் செய்ததாக மலையாள பட தயாரிப்பாளர் வைஷக் ராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாடல் அழகியும், வளர்ந்து வரும் நடிகையுமான இளம் பெண் ஒருவருக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி மலையாள தயாரிப்பாளர் வைஷக் ராஜன் அவரை தனது வீட்டிற்கு அழைத்ததாக செய்திகள் வெளியாகின.

தயாரிப்பாளரின் பேச்சை நம்பி அந்த பெண் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கத்ரிகடவில் இருக்கும் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து ராஜன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பத்மஸ்ரீ டாக்டர் சரோஜ் குமார்(2012), வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில்(2016), சங்க்ஸ்(2017), ரோல் மாடல்ஸ்(2017) ஆகிய படங்களை தயாரித்துள்ளார் வைஷக் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











