நடிகையின் வருங்கால கணவரை தாக்கி இன்ஸ்டாவில் லைவ் செய்த பாடகரின் மேனேஜர்
டெல்லி: நடிகை ராக்கி சாவந்தின் வருங்கால கணவரை பாடகர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் தாக்கி அதை இன்ஸ்டாகிராமில் லைவ் செய்துள்ளார்.
பாலிவுட் நடிகை ராக்கி சாந்த் நகைச்சுவை நடிகர் தீபக் கலாலை திருமணம் செய்யப் போவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் திருமண அழைப்பிதழையும் வெளியிட்டார். ஆனால் அவர் பொய் சொல்கிறார் என்றார்கள் நெட்டிசன்கள்.

தீபக்
ராப்பர் ஃபாசல்புரியாவின் மேனேஜர் தீபக் நந்தால் ராக்கியின் வருங்கால கணவர் தீபக் கலாலை குருகிராமில் சாலையோரம் வைத்து தாக்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

அடி
தீபக் கலால் சமூக வலைதளங்களில் மோசமாக போஸ்ட் போடுவதாகக் கூறி அவரை நந்தால் அடித்துள்ளார். நந்தால் கலாலை தாக்குவதை இன்ஸ்டாகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்துள்ளார். கலால் நந்தாலின் காலை தொட்டு மன்னிப்பு கேட்டு அழுதும் அவர் சும்மாவிட வில்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நந்தாலுக்கு ஆன்லைனில் ஆதரவு கிடைத்துள்ளது.
போலீஸ்
நந்தால் தீபக் கலாலை தாக்கிய வீடியோவை வெளியிட்டு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெட்டிசன்கள் சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
ஃபாசில்புரியா
நந்தாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஃபாசில்புரியாவுடன் இருக்கும் புகைப்படங்கள் மேலும் துப்பாக்கிகள் வைத்திருக்கும் புகைப்படங்கள் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











