Thalapathy Kacheri : தளபதி கச்சேரி பாட்டு.. எழுதுனவரே பாடும் போது இன்னும் நல்லா இருக்கேப்பா!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜன நாயகன். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் புரோமோசன் வேலைகளை படக்குழு தொடங்கிவிட்டது. படத்தில் இருந்து முதல் பாடல் நேற்று அதாவது நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பாடலை எழுதிய தெருக்குரல் அறிவு பாடலில் உள்ள சில வரிகளை மட்டும் பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் தான் அவரது கடைசி படம். இந்த படத்திற்கு பின்னர் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார். தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் முழு மூச்சாக செயல்பட சினிமாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இப்படி இருக்கும்போது தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

படத்தை ஹெச். வினோத் இயக்க, விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரிய மணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தை கே.வி.என் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அதேபோல் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு மட்டும் சுமார் 200 முதல் 225 கோடிகள் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டு உள்ளது.
பகவந்த் கேசரி ரீமேக்: இப்படி இருக்கையில் இந்த படத்தை தெலுங்கில் வெளியான பாலய்யா நடித்த படமான பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்று கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் அப்படியான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை சில போஸ்டர்களும், ஒரு கிளிம்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டிருந்தது. இப்படி இருக்கும்போது, படத்தின் முதல் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. தளபதி கச்சேரி என்ற தலைப்பில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெருக்குரல் அறிவு: இந்நிலையில் பாடலை எழுதி, பாடலில் ஆங்காங்கே பாடியுள்ளவருமான தெருக்குரல் அறிவு, பாடலில் உள்ள முக்கியமான சில வரிகளை ஒரு வயல்காட்டில் நின்று கொண்டு பாடி, பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் பலரும் எழுதியவர் பாடும்போது பாட்டு இன்னும் நல்லா இருக்கே என்று பாராட்டி வருகிறார்கள். பாடல் வெளியாகி 18 மணி நேரத்தில் 8.7 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.


Click it and Unblock the Notifications











