Vedan Marriage: ஜெய்பீம் கோஷம் முழங்க திருமணத்தை நடத்தினார் வேடன்.. அவரோட மனைவி யாரு தெரியுமா?

திருவனந்தபுரம்: கேரளா மற்றும் தமிழ்நாட்டு ரசிகர்களிடையே திடீரென டிரெண்டான ராப் இசைக் கலைஞரான வேடன் தனது காதலியை திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. திருமணத்துக்கு முன்பாக ஜெய்பீம் கோஷத்துடன் அவரது தனது காதலி நவமி லதாவை கரம் பற்றினார். நவமி லதா ஒரு பிரபல எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தப் பெரிய இசைப் பின்னணியும் இல்லாமல், தனது திறமையை மட்டுமே நம்பி யூடியூப் மூலமாகவே முன்னேறியவர் வேடன். அவரது ஆரம்பகால பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ராப் இசைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும், சிந்தனைப் போக்கையும் கொண்டு வந்ததாகப் பாராட்டப்பட்டன. சமூகத்தின் மீதான விமர்சனங்களும், தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களின் நேரடியான வெளிப்பாடுகளும் அவரை மற்ற ராப் கலைஞர்களிடமிருந்து தனித்துக் காட்டின.

Rapper Vedan married his long time girlfriend and popular writer Navami Latha
Photo Credit:

'குத்தந்திரம்' எனும் பாடல், வேடனின் இசைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி, பான் இந்திய அளவில் கவனம் ஈர்த்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல், அவரைத் திரை இசை ரசிகர்களிடையேயும் பரவலாக அறிமுகப்படுத்தியது. பாடலின் ஆற்றல், மாறுபட்ட ராப் பாணி மற்றும் குரல் அமைப்பு ஆகியவை ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றன.

'குத்தந்திரம்' பாடலின் வெற்றிக்குப் பிறகு, வேடனுக்குத் தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. சமீபத்தில் வெளியான 'நரிவேட்டை' படத்தில் அவர் பாடிய பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதேபோல், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'பைசன்' திரைப்படத்தில் அவரது குரல், கதையின் உணர்வை மேம்படுத்தியதாகப் பெரிதும் பாராட்டுதல்களைப் பெற்றது.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் வேடன் தொடர்ந்து நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இசையுலகில் தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடரும் வேடன், தற்போது தனது வாழ்க்கையின் அடுத்த முக்கிய கட்டமாக திருமண பந்தத்திற்குள் நுழைந்துள்ளார். அவரது நீண்டகால காதலியும், எழுத்தாளருமான நவமி லதாவை பிப்ரவரி 24 ஆம் தேதி திருச்சூரில் திருமணம் செய்துக் கொண்டார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஜெய்பீம் முழக்கத்துடன் திருமணம் செய்துக் கொண்ட வேடனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், மணமேடையில் நூறு வருஷம் பாடலையும் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக பாடி ஆடி கொண்டாடிய காட்சிகளும் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X