சிவாஜியை வைத்து ஃபோட்டோஷுட் நடத்திய கமல்... வைரலாகும் பிளாக் அன்ட் ஒயிட் ஃபோட்டோ

சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் இலக்கணம், நடிப்பின் யுனிவர்சிட்டி என்றெல்லாம் அனைவராலும் புகழப்படுபவர்கள். தான் சினிமாவில் கோலோட்சிய காலத்தில் ரசிகர்களால் மட்டுமின்றி இந்திய அளவில் டாப் ஹீரோக்களாக புகழ்பெற்றவர்களும் சிவாஜியை பாராட்டி, அவர் நடிப்பில் ஜீனியர் என புகழப்பெற்றுள்ளார்.

இந்திய சினிமாவின் ஒப்பற்ற நடிகர் என புகழப்பெற்ற சிவாஜியை திலீப்குமார், ராஜ்குமார், நாகேஸ்வர ராவ் என பாராட்டி உள்ளனர். அவருக்கு பின் வந்த அமிதாப் பச்சன், ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் என பலரும் சிவாஜியை தங்களின் குருவாக ஏற்று, சிவாஜியிடம் இருந்து தற்போது வரை நிறைய கற்றுக் கொண்டு வருவதாக கூறி வருகிறார்கள்.

 Rare photo of Sivaji Ganesh photoshot by Kamal goes viral

சிவாஜியின் ஸ்டைலாக லுக், தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாகவே மாறி, அதோடு ஒன்றி தத்ரூபமாக நடிப்பது ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த விஷயம். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். புகழ்பெற்ற பிஆர்ஓ டைமண்ட் பாபு, தற்போது சிவாஜியின் அரிய ஃபோட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதில் சிவாஜி தனக்கே உரிய ஸ்டைல் லுக்கில் போஸ் கொடுக்க, அவரை கேமிராவால் ஃபோட்டோ எடுப்பது வேறு யாருமல்ல கமலஹாசன் தான். சிவாஜியை, கமல் விதவிதமான போஸ்களில் ஃபோட்டோ எடுக்கும் இந்த ஃபோட்டோ, இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

கமல் இதுவரை சிவாஜியுடன் இருக்கும் பல அரிய ஃபோட்டோக்களை வெளியிட்டுள்ளார். ஆனால் இது போன்ற ஒரு ஃபோட்டோ முதல் முறையாக வெளியாகி உள்ளதால் அது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் வெள்ளை நிற சட்டை, கழுத்தில் டை என செம ஸ்டைலாக சிவாஜி போஸ் கொடுத்துள்ளார்.

 Rare photo of Sivaji Ganesh photoshot by Kamal goes viral

பாவ மன்னிப்பு முதல் தேவர் மகன் வரை பல படங்களில் சிவாஜியுடன் இணைந்து நடித்துள்ளார் கமல். தற்போது சிவாஜியுடன் தான் கடைசியாக இணைந்து நடித்துள்ள தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் கமல். தேவர்மகன் 2 படத்திற்காக கதை தயாரிக்கும் வேலைகளில் கமல் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு கமலே கதை, திரைக்கதை எழுதி வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X