’கண்ணுக்குள் நிலவு’ செட்டில் நடந்த விஜய் ரிசப்ஷன்.. ஷாலினியின் ரியாக்‌ஷன்.. அரிதான புகைப்படங்கள்!

சென்னை: 'கண்ணுக்குள் நிலவு' செட்டில் நடந்த நடிகர் விஜய்யின் ரிசப்ஷன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

காதலுக்கு மரியாதை படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் ஷாலினியுடன் மீண்டும் இணைந்து நடித்த படம் கண்ணுக்குள் நிலவு.

சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணுக்குள் நிலவு படத்தைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அந்த ஹாஷ்டேக்கையும் இந்த போட்டோக்களையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் திருமணம்

விஜய் திருமணம்

1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி நடிகர் விஜய், தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். அடுத்த மாதம் இருவரும் தங்களது 21வது திருமண ஆண்டு விழாவை கொண்டாட உள்ளனர். இந்த தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர்.

ஷாலினி உடன்

ஷாலினி உடன்

1997ம் ஆண்டு இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் வெளியான காதலுக்கு மரியாதை படம் நடிகர் விஜய் மற்றும் ஷாலினிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் இணைந்து நடித்த படம் தான் கண்ணுக்குள் நிலவு. 2000ம் ஆண்டு அதே கூட்டணியில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கண்ணுக்குள் நிலவு செட்டில்

கண்ணுக்குள் நிலவு செட்டில்

கண்ணுக்குள் நிலவு படத்தின் ஷூட்டிங்கின் போது தான் தனது ரசிகையான சங்கீதாவை நடிகர் விஜய் காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், அந்த படத்தின் செட்டில் நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவுக்கு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியின் அரிதான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.

ஷாலினி ரியாக்‌ஷன்

ஷாலினி ரியாக்‌ஷன்

இயக்குநர் ஃபாசில், தாமு, சார்லி, ஷாலினி உள்ளிட்ட படக்குழுவினர் சூழ, நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. அனைவரும் வாய் விட்டு சிரித்தாலும், நடிகை ஷாலினி, மெளனமாக தனக்கே உரிய புன்னகை ரியாக்‌ஷனை கொடுத்திருக்கும் அழகான தருணங்கள் இந்த புகைப்படங்களில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்காகவும், ‘தளபதி 65' படத்தின் அப்டேட்டுக்காகவும் காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு, பல நினைவுகளை மீண்டும் நினைவு கூறும் அவரது பொக்கிஷமான த்ரோபேக் புகைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அதனை டிரெண்ட் செய்தும் வைரலாக ஷேர் செய்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X