Actor Suriya: சூர்யாவுடன் இணைந்த ரசவாதி பட நடிகர்.. மிரட்டலான கூட்டணி!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன. படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ள நிலையில் அதற்கான வேலைகள் அதிகமாக உள்ளதால் அந்த வேலைகளில் இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் பிசியாக உள்ளனர்.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் தற்போது அந்தமானில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். அந்தமானில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து ஒரு மாத காலங்கள் நடத்தப்பட உள்ளன.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் இம்மாதம் 2ம் தேதி அந்தமானில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிது. இந்தப் படத்தில் அவருடன் ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் சூழலில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. படத்தின் ஸ்டண்ட் மாஸ்டராக கீசா கம்பக்டீ இணைந்துள்ளார். இவர் முன்னதாக விஜய்யின் துப்பாக்கி, ஷாருக்கானின் ஜவான் படங்களில் பணியாற்றியுள்ள நிலையில் தற்போது அந்தமானில் சூர்யாவை ஆக்ஷன் காட்சிகளில் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் க்யூட் பாடல் ஒன்று ரெடியாகி உள்ளது.
அந்தமான் சூட்டிங்: இந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளதாகவும் அதில் சூர்யா -பூஜா ஹெக்டே இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ள சூழலில் அடுத்ததாக சென்னையில் இந்த படத்தின் சூட்டிங்கை தொடர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தில் சூர்யாவுடன் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது படத்தின் புதிய வரவாக சமீபத்தில் வெளியான ரசவாதி படத்தில் நடித்து மாஸ் காட்டியிருந்த பிரபல மலையாள நடிகர் சுஜித் சங்கர் சூர்யாவுடன் இணைந்துள்ளார்.
ரசவாதி பட நடிகர்: இந்த படத்தின் அந்தமான் ஷூட்டிங்கில் சுஜித் இணைந்து தற்போது சூர்யாவுடனான காம்பினேஷன் காட்சிகளில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த படத்திற்காக அந்தமானில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஒரு மாத காலங்கள் அங்கேயே இருந்து ஷூட்டிங்கில் பங்கேற்று வருகின்றனர். இந்த படம் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் காம்பினேஷனில் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வெளியான கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது சூர்யாவுடன் அவர் இணைந்துள்ளார்.
இம்மாதத்தில் டைட்டில் ரிலீஸ்?: இதனிடையே சூர்யாவின் கங்குவா படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரிலீசுக்கு காத்திருக்கிறது. இந்த படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சூர்யா -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா 44 படத்தின் டைட்டில் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி ஜூலை 23ம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்: அந்த நாளிலேயே கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது அடுத்த மாதம் 23ம் தேதி கொண்டாட்டத்திற்கு தற்போதே சூர்யா ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அவரது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்களை அன்றைய தினம் என்ஜாய் செய்யவும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











