அப்பாடா, மெர்சிடிஸ் வாங்கலாம்னு நினைச்சேன்.. இப்ப நல்லதா போச்சு.. பெருமூச்சு விடும் பிக்பாஸ் நடிகை!

By

மும்பை: பிரபல பிக்பாஸ் நடிகை, பென்ஸ் கார் வாங்கும் ஆசையை கைவிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Recommended Video

Sindhu Bairavi நடிகை Rashmi Desai நாகினி 4ல் நீக்கபட்டாரா?

பிரபல இந்தி நடிகை ரஸாமி தேசாய். தபாங் 2 உட்பட சில இந்திப் படங்களில் நடித்திருக்கிறார்.

தில் சே தில் தக் உட்பட ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் 13 வது நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

ஷூட்டிங் தொடக்கம்

ஷூட்டிங் தொடக்கம்

இப்போது நாகினி 4 தொடரில், நயன்தாரா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் ரஸாமி தேசாய், நியா சர்மா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இது இந்தத் தொடரின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு. இதில் ரஸாமி, மஞ்சள் சேலையுடன் கேரவனில் இருந்து இறங்கும் வீடியோவும் நியா சர்மா மேக்கப் போடும் வீடியோவும் சமீபத்தில் வெளியாகி இருந்தன.

பொருளாதார நெருக்கடி

பொருளாதார நெருக்கடி

இந்நிலையில் கொரோனா காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனால், பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பலர் வேலை வாய்ப்புகளை இழந்துவிட்டனர். தினசரி வேலை பார்த்து சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர்.

தேவைகள் அடிப்படையில்

தேவைகள் அடிப்படையில்

இந்நிலையில், லாக்டவுனுக்கு முன்பாக தான் கார் வாங்கும் திட்டம் வைத்திருந்ததாகவும் அதை ரத்து செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடிகை ரஸாமி தேசாய். அவர் கூறியிருப்பதாவது: இந்த லாக்டவுன் காரணமாக, பண நெருக்கடியை சந்தித்து வருகிறோம். சரியாகத் திட்டமிடவில்லை என்றால் பணக் கஷ்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். நம் வாழ்க்கை நம் தேவைகள் அடிப்படையில்தான் நடக்கிறது.

குறைத்துக் கொண்டேன்

குறைத்துக் கொண்டேன்

தேவைகளைக் குறைத்துக் கொண்டால் செலவுகள் குறையும். நான் என் தேவைகளைக் குறைத்துக் கொண்டேன். மிகவும் எச்சரிக்கையாகவே செலவுகளை செய்கிறேன். அதனால் சரியாகத் திட்டமிட்டு செலவழியுங்கள். இந்த நிலைமை விரைவில் சீராகும் என்று நம்புகிறேன். நான் சரியாகத் திட்டமிட்டே வாழ்கிறேன்.

மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ்

பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததுமே மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டேன். அது நல்லதாக அமைந்துவிட்டது. மக்கள் என்னை அறிந்திருப்பது என் வேலை காரணமாகவே. வாழ்க்கையில் நான் என்னென்ன வைத்திருக்கிறேன் என்பதை வைத்து அல்ல, என்பதை புரிந்துகொண்டேன். இவ்வாறு நடிகை ரஸாமி தேசாய் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X