மழைவிட்டாலும் தூரல் விடாத கதையா அயோக்யா பிரச்சனை: மன்னிப்பு கேட்ட ஹீரோயின்

By Siva

Recommended Video

ayogya movie audience opinion | அயோக்கிய படம் எப்படி இருக்கு மக்கள் கருது

சென்னை: அயோக்யா விவகாரம் தொடர்பாக அந்த படத்தின் ஹீரோயின் ராஷி கன்னா மன்னிப்பு கேட்டுள்ளார்.

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கன்னா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்த அயோக்யா படம் பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளது.

Rashi Khanna says sorry to dubbing artist

தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்றாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸை பாராட்டாதவர்களே இல்லை. இந்நிலையில் ராஷி கன்னாவுக்கு டப்பிங் பேசிய ரவீனா ட்விட்டரில் புகார் தெரிவித்தார்.

அயோக்யா படத்தில் டப்பிங் கலைஞர்களின் பெயர்களை என்ட் கார்டில் போடவில்லை. மெஸ் அண்ணாக்கள், டிரைவர்கள், பெயிண்டர்கள், கார்பென்டர்கள், சவுண்டு என்ஜினியர்கள், ஸ்டுடியோக்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என்று அனைவருக்கும் கிரெடிட் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு மட்டும் பெரும்பாலான நேரம் கிரெடிட் கிடைப்பது இல்லை. காத்திருப்போம் என்று ரவீனா ட்வீட் செய்தார்.

ரவீனாவின் ட்வீட்டை பார்த்த ராஷி கன்னா மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தனக்காக டப்பிங் பேசியதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

விஷால் தான் கண்டுகொள்ளவில்லை, ராஷியாவது மன்னிப்பு கேட்டாரே என்று நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X