படப்பிடிப்பில் பங்கேற்ற... பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. தனிமை சிகிச்சை.. ஷூட்டிங் தள்ளிவைப்பு!
ஐதராபாத்: பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவுக்காக பிறக்கப்பட்ட லாக்டவுனில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டாலும் இந்த வைரஸ் தொடர்ந்து மிரட்டி வருகிறது.

பரவும் தொற்று
இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இதனால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. சினிமா நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் உள்பட பலருக்கும் இந்த தொற்று பரவி இருக்கிறது.

கண்டேன் ஹீரோயின்
இந்நிலையில் பிரபல நடிகை ராஷ்மி கவுதமுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மி, இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

காமெடி ஜபர்தஷ்
இப்போது தெலுங்கில், டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஜபர்தஷ் என்ற காமெடி நிகழ்ச்சியின் ஷுட்டிங்கில் இவர் பங்கேற்று இருந்தார். அதில் அவருடன் பங்கேற்ற சுதீருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ராஷ்மி கவுதமும் பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

தள்ளி வைப்பு
இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் இவர் பங்கேற்க இருந்த டிவி நிக்ழ்ச்சிகளின் ஷூட்டிங் நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நடிகர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

குணமாகி மீண்டனர்
கொரோனாவால் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜுன், நிக்கி கல்ராணி, ஜெனிலியா, தமன்னா, இயக்குனர் ராஜமவுலி, மலைகா அரோரா, அர்ஜுன் கபூர், விஷால், பிருத்விராஜ் உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.


Click it and Unblock the Notifications











