என்ன சொல்றீங்க… ராஷ்மிகா மந்தனாவுக்கு அந்த நடிகருடன் திருமணமா?
சென்னை : நேஷனல் க்ரஷ் நாயகி ராஷ்மிகா மந்தனா, பிரபல நடிகரைத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
கர்நாடகவில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னட சினிமாவில் இருந்து தெலுங்குக்கு வந்தவர்.
கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி மொழிகளில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா
கீதா கோவிந்தம் திரைப்படத்தில் ராஷ்மிகாவை பார்த்த பல இளசுகள் தங்கள் மனத்தை பறிகொடுத்து அவரின் தீவிர ரசிகர்கள் ஆகினர். அவரின் வெகுளித்தனமான நடிப்பும், க்யூட்டான சிரிப்பாலும் கவரப்பட்ட ரசிகர்கள் இவருக்கு நேஷனல் க்ரஷ் நாயகி என பெயர் வைத்து அழகு பார்த்தனர்.

பல திரைப்படங்களில்
டோலிவுட்டை ஒரு கலக்குகலக்கி வந்த ராஷ்மிகா மந்தனா, தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ரவுண்டுகட்டி நடித்து வருகிறார். அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில், வாயா சாமி ... பாடலுக்கு நச்சுனு ஆட்டம் போட்டு இருந்தார் ராஷ்மிகா. தற்போது, பாலிவுட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் ராஷ்மிகா, மிஷன் மஜ்னு, அமிதாப் பச்சனுடன் குட்பை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா காதலிக்கிறாரா?
ராஷ்மிகா மந்தனா, கீதா கோவிந்தம் திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாகவும், இவர்கள் இருவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றித்திரிந்த புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து கிசுகிசுக்கப்பட்டது. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் திரைப்படத்தில் இவர்கள் இருவரின் கேமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க்கவுட்டாகி இருக்கும். இந்த படங்கள் வெற்றி பெற இவர்கள் இருவரின் ஜோடிதான் காரணம் என்று சொல்லாம்.

காட்டுத்தீ போல் பரவிய செய்தி
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பான செய்தி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஆனால், ராஷ்மிகாவோ, விஜய் தேவரகொண்டாவோ இதுகுறித்து மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக உள்ளனர். ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், திருமணத்தைப்பற்றி யோசிக்கவில்லை என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











