ராஷ்மிகா Vs விஜய் தேவரகொண்டா.. உறுதியான காதல்.. விரைவில் திருமணம்!
சென்னை: தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா,
நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் இணைந்து நடித்ததில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக பரவி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் ராஷ்மிகா சில வேலைகளை செய்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒற்றில் பேசி உள்ளார்.
அதில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அது பற்றி இருவருமே வாய் திறக்காமல் இருந்த நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் ராஷ்மிகா மந்தனாவின் நடவடிக்கை அமைந்து இருக்கிறது . குபேரா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்ட நிலை, ஒருவர் விஜய் தேவரகொண்டாவிடமிருந்து எதை எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த, ராஷ்மிகா மந்தனா அவரிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார். அவரின் இந்த பதிலால் அரங்கமே அதிர்ந்தது.

ராஷ்மிகா: அதைத்தொடர்ந்து இருவரும் மும்பை விமான நிலையத்தில் ஒன்றாக வந்த போது, மாஸ்க் அணிந்து கொண்டு தனித்தனியாக நடந்து சென்றனர். வெளியே வந்த இருவரும் ஒன்றாக ஒரே காரில் புறப்பட்டு சென்றார்கள். இதற்கு முன் இவர்கள் இருவரும் மாலத்தீவுக்கு சென்றார்கள், டேட்டிங்கி செய்கிறார்கள் செய்தி பரவிய போதும், இருவரும் ஒன்றாக காரில் பயணம் செய்தது இல்லை. தனித்தனியாகத்தான் செல்வார்கள்.ஆனால், இந்த முறை ஒன்றாக ஒரே காரில் சென்றதை பார்க்கும் போது, இருவரும் திருமணத்திற்கு தயாராகி விட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது என பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
உறுதியான காதல்: இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா. விஜய், அல்லு அர்ஜுன், ரன்பீர் கபூர் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது, தனுஷ், நாகர்ஜுனா நடித்துள்ள குபேரா படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. தெலுங்கில் முன்னணி நடிகராக விஜய்தேவரகொண்டாவின் கிங்டம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா இந்தியில் தமா, காக்டெயில் 2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 36 வயதான விஜய் தேவரகொண்டாவிற்கும், 29 வயதான ராஷ்மிகாவிற்கும் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,


Click it and Unblock the Notifications











