கடுப்பான கார்த்தி: மன்னிப்பு கேட்ட அதிகப்பிரசங்கி நடிகை
சென்னை: நடிகை ரஷ்மிகா மந்தனா கார்த்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளாராம்.
கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ரஷ்மிகா மந்தனா பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். படத்தின் தலைப்பை படக்குழு அறிவிக்கும் முன்பு அதை இன்ஸ்டாகரிாமில் உளறிவிட்டார்.

தான் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கும் படத்தின் பெயர் சுல்தான் என்று தெரிவித்தார் ரஷ்மிகா. அவரின் இந்த செயலால் கார்த்தி, பாக்யராஜ் கண்ணன் கோபத்தில் உள்ளார்களாம்.
கார்த்தி தன் மீது கோபமாக இருப்பது அறிந்து ரஷ்மிகா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளாராம். மேலும் படக்குழுவினரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளாராம். படத் தலைப்பை பிரமாண்டமாக அறிவிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தான் ரஷ்மிகா உளறிவிட்டார்.
சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தை ரஜினியை வைத்து எடுக்கவிருந்த அனிமேஷன் படத்திற்கு சுல்தான் என்று பெயர் வைத்திருந்தார். ஆனால் அந்த படம் கைகூடவில்லை. இந்நிலையில் தான் கார்த்தி படக்குழு சவுந்தர்யாவிடம் அனுமதி பெற்று அந்த தலைப்பை வாங்கியுள்ளது.

கார்த்தியின் சுல்தான் படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரிக்கிறார். விவேக் மற்றும் மெர்வின் இசையமைக்கிறா்கள். படத்தின் கதை குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடவில்லை.
பிகில் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக ரஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை விஜய்க்கு ஜோடியாக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
பாலிவுட்டில் இருந்து நடிகையை அழைத்து வர வேண்டும் என்பது விஜய் அல்லது லோகேஷின் ஐடியா என்று கூறப்படுகிறது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங்கில் நடித்து அசத்திய கியாரா தளபதி 64 படத்திற்காக டேட்ஸ் அட்ஜஸ்ட் செய்வதாக கூறியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











