பாண்டிராஜ் இயக்கும் பிரம்மாண்ட படம்.. நடிகர் சூர்யா ஜோடியாகிறாரா கார்த்தி ஹீரோயின்.? கோலிவுட் தகவல்!
சென்னை: சூர்யா ஜோடியாக, கார்த்தி பட ஹீரோயின் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
சூர்யா நடித்துள்ள, சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் கடந்த 12 ஆம் தேதி வெளியானது.
சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பாடல்கள் ஹிட்டாயின
இந்தப் படத்தில் சூர்யா மனைவியாக, அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட், மோகன்பாபு, பரேஸ் ராவல் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். அவர் இசையில் பாடல்கள் ஹிட்டாயின. இந்தப் படத்தை அடுத்து, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா.

ஜோடியாக ராஷ்மிகா
இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பிரம்மாண்ட படமாக உருவாகும் இதன் கதை, கிராமத்துப் பின்னணியில் அமைகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேசி வருகின்றனர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆர்வம் காட்டுகிறார்
படக்குழு அவரிடம் பேசி வருவதாகவும் இது பற்றி படக்குழு அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் கன்னடத்தில் அறிமுகமானவர். தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள அவர், தமிழில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

சித்தூர் வழக்கு
இப்போது, கார்த்தி ஜோடியாக, சுல்தான் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இதை சுகுமார் இயக்குகிறார். செம்மரக்கடத்தல் தொடர்பான கதை இது என்று கூறப்படுகிறது. இந்தப் படத்துக்காக சித்தூர் வழக்குப் பேசி அவர் நடிக்க இருக்கிறார்.

ஹீரோயின்களை முந்தி
2020 ஆம் வருடத்தின், நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா ஆகியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கூகுளில் இதைப் பதிவிட்டு தேடினால், ராஷ்மிகா மந்தனாவின் பெயர் வருகிறது. இதன் மூலம், அவர் பிரபலமான முன்னணி ஹீரோயின்களை முந்தி, இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











