அதற்குள் இவ்வளவு வளர்ச்சியா? இவர்தான் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாமே? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
சென்னை: இப்போதைய நிலையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என இந்த ஹீரோயினை சொல்கிறார்கள்.
சினிமாவில் எப்போது, யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் என்று தெரியாது. ஒரு படம், அல்லது ஒரு கேரக்டர் திடீரென உயரத்துக்கு கொண்டு சென்றுவிடும்.
இதற்கு பலரை உதாரணமாகச் சொல்லலாம். சில ஹீரோக்கள் கூட இதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்கள்.

ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில் கன்னடத்தில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கு வந்தவர் ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் ஹீரோவாக நடித்த ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

நிச்சயதார்த்தம்
கடந்த 2017 ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு திடீரென இருவரும் பிரிந்தனர். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதையத்து சலோ படம் தெலுங்குக்கு வந்த ரக்ஷனாவுக்கு அடித்தது லக். அவர் அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட, வாய்ப்புகள் குவிந்தன.

மகேஷ்பாபு
பின்னர் தேவதாஸ், விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படங்களில் நடித்தவருக்கு வந்தது அடுத்த அதிர்ஷ்டம். தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவாக மகேஷ்பாபு ஜோடியாக சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் வாய்ப்பு கிடைக்க, கெட்டியாக பிடித்துக்கொண்டார். இந்த படமும் நிதினுடன் அவர் நடித்த பீஷ்மா படம் ஹிட்டாக, ராஷ்மிகாவுக்கு மார்கெட் ஜிவ்வென்று ஏறியது.

கார்த்தியுடன் சுல்தான்
இப்போது துருவா சார்ஜாவுடன் கன்னடம், தெலுங்கில் உருவாகும் பொகுரு, தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. அடுத்து அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் நடித்துவருகிறார். இது பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் உருவாகிறது.

அல்லு அர்ஜுன்
சுகுமார் இயக்குகிறார். செம்மரக்கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், புஷ்பராஜ் என்ற லாரி டிரைவராக நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக இருந்தது. அவர் விலகியதால் வேறு வில்லனை தேடி வருகின்றனர்.
Recommended Video

அதிக சம்பளம்
இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவை, தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் என்று சொல்கிறார்கள் இப்போது. இவர் இப்போது நடிக்கும் புஷ்பா படத்துக்கு ரூ.2.5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். இவர் நடித்து மொத்தமே 10 படங்கள்தான் வெளியாகி இருக்கிறது. அதற்குள் இத்தனை கோடி சம்பளமா என வாய்ப்பிளக்கிறார்கள் சக நடிகைகளும் ரசிகர்களும்.


Click it and Unblock the Notifications











