Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னா ஸ்டைல்.. சொகுசு கார் வாங்கிய பிரபல ஹீரோயின்.. 'நீங்க இல்லைனா முடியாது'.. ரசிகர்களுக்கு நன்றி!
சென்னை: பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.
சினிமாவில் யாருக்குமே சொல்லலையாமே.. பிரபல நடிகை ரகசிய திருமணம்.. இன்று நடக்கிறது!
இதையடுத்து சலோ என்ற படம் மூலம், தெலுங்குக்கு வந்தார். விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட, வாய்ப்புகள் குவிந்தன.

சூப்பர் ஹிட்டானது
தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான மகேஷ்பாபு ஜோடியாக, சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

செம்மரக் கடத்தல்
இதை சுகுமார் இயக்குகிறார். செம்மரக் கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இந்தப் படத்தில் சித்தூர் பகுதி பெண்ணாக, நடிக்கிறார், ராஷ்மிகா. அடுத்து தெலுங்கு ஹீரோ சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்கிறார். இதற்கிடையே மேலும் 2 தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

நேஷனல் க்ரஷ்
தமிழில், கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. இதை 'ரெமோ' பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 2020 ஆம் வருடத்தின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார்.

மிஷன் மஞ்சு
இதற்காக அவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதற்கிடையே, ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதன்படி மிஷன் மஞ்சு என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

அமிதாப் பச்சன்
இந்நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். விகாஷ் பால் இயக்கும் இந்தப் படத்தில் அவர் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார். அப்பா - மகள் பற்றிய கதையான இதில் நீனா குப்தா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு டெட்லி என்ற தற்காலிக டைட்டில் வைத்துள்ளனர்.

ரேஞ்ச் ரோவர் கார்
நடிகை ராஷ்மிகா மந்தனா, இப்போது சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். புதிய ரேஞ்ச் ரோவர் காரை வாங்கியுள்ள அவர், காரின் முன் ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அவர்கள் இல்லாமல் இத்தகைய உயரங்களை எட்டியிருக்க முடியாது என கூறியுள்ளார்.