சூர்யா ஜோடி? 'அடுத்த தமிழ்ப் படத்தில் கமிட் ஆகிட்டேன், ஆனா..' சஸ்பென்ஸ் வைக்கிறார் நடிகை ராஷ்மிகா!

By

சென்னை: அடுத்த தமிழ் படத்தில் கமிட் ஆகிவிட்டேன் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இருந்து தெலுங்குக்கு சென்ற அவர், அங்கு டாப் ஹீரோயினாக இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட்டதை அடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.

பெரிய ஹீரோ

பெரிய ஹீரோ

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான மகேஷ்பாபு ஜோடியாக, சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

ஆடலூ மீக்கு ஜோகார்லு

ஆடலூ மீக்கு ஜோகார்லு

இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இதை சுகுமார் இயக்குகிறார். செம்மரக் கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இந்தப் படத்தில் சித்தூர் பகுதி பெண்ணாக, நடிக்கிறார், ராஷ்மிகா. இதற்கிடையே தெலுங்கு ஹீரோ சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

சுல்தான் ரிலீஸ்

சுல்தான் ரிலீஸ்

இதையடுத்து மேலும் 2 தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் ரிலீஸ் தள்ளிப் போய் இருக்கிறது.

நேஷனல் க்ரஷ்

நேஷனல் க்ரஷ்

இதற்கிடையே அவர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், 2020 ஆம் வருடத்தின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்ற பெருமையை பெற்றிருந்தார். இதற்காக அவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டித் தள்ளினர்.

பாலிவுட் அறிமுகம்

பாலிவுட் அறிமுகம்

இதற்கிடையே, ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதன்படி மிஷன் மஞ்சு என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார். ஷாந்தனு பாஹி இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

அமிதாப்புடன் நடிப்பு

அமிதாப்புடன் நடிப்பு

இந்நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். விகாஷ் பால் இயக்கும் இந்தப் படத்தில் அவர் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார். அப்பா - மகள் பற்றிய கதையான இதில் நீனா குப்தா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு டெட்லி என்ற தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர்.

தமிழில் 2 வது படம்

தமிழில் 2 வது படம்

இந்நிலையில், சமூக வலைதளத்தில், ரசிகர்களின் கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த ராஷ்மிகா மந்தனா, சுல்தானுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் கமிட் ஆகிவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், அந்தப் படம் பற்றி இப்போது சொல்லமாட்டேன் என்றும் சுல்தான் ரிலீஸுக்கு பிறகுதான் அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X