சமந்தா, நயன்தாராவை ஓரங்கட்டினார்.. இந்த வருடத்தின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' இந்த ஹீரோயின்தான்!

By

சென்னை: இந்த வருடத்தின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' ஆகியிருக்கிறார் கார்த்தி பட ஹீரோயின்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

அடுத்து சலோ படம் மூலம் தெலுங்குக்கு சென்றார். அடுத்து, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட, வாய்ப்புகள் குவிந்தன.

பெரிய ஹீரோ

பெரிய ஹீரோ

தேவதாஸ், விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவாக மகேஷ்பாபு ஜோடியாக நடித்த சரிலேரு நீக்கெவ்வரு, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

சித்தூர் பெண்

சித்தூர் பெண்

இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இதை சுகுமார் இயக்குகிறார். இதில் சித்தூர் பகுதி பெண்ணாக, நடிக்கிறார், ராஷ்மிகா. அடுத்து சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து மேலும் 2 படங்களுக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.

சம்பள பட்டியல்

சம்பள பட்டியல்

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும்
நடிகைகள் பட்டியலில் இணைந்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

நேஷனல் க்ரஷ்

நேஷனல் க்ரஷ்

இந்நிலையில், 2020 ஆம் வருடத்தின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா ஆகியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கூகுளில் இதைப் பதிவிட்டு தேடினால், ராஷ்மிகா மந்தனாவின் பெயர் வருகிறது. இதன் மூலம், அவர் பிரபலமான முன்னணி ஹீரோயின்களை முந்தி, இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

கூகுள் தேடுபொறி

கூகுள் தேடுபொறி

நடிகைகள் அனுஷ்கா ஷெட்டி, சமந்தா, பூஜா ஹெக்டே, தீபிகா படுகோன் உட்பட பல டாப் ஹீரோயின்களை தாண்டி இருக்கிறார், ராஷ்மிகா. கூகுள் தேடுபொறி, அதிகமாகத் தேடப்படும் நடிகைகள் லிஸ்ட்டை வைத்து, அதுவாகவே இப்படி நடிகைகளை முன்னிலைப்படுத்துகிறது.

Recommended Video

Amala paul workout | Anoshka engage finally? | Rashmika Pairs Surya in Aruva
அதிகமானோர் தேடல்

அதிகமானோர் தேடல்

அதன்படி, இந்த 2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, அவரை நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது. இதையடுத்து நடிகை ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X