கொரோனா காலத்திலும்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்த பிரபல ஹீரோயின்!

By

சென்னை: அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில், இந்த கொரோனா காலத்திலும் பிரபல நடிகை இணைந்திருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

இதையடுத்து சலோ என்ற படம் மூலம் தெலுங்குக்கு வந்தார். அடுத்து, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட, வாய்ப்புகள் குவிந்தன.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

இதையடுத்து தேவதாஸ், விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவாக மகேஷ்பாபு ஜோடியாக சரிலேரு நீக்கெவ்வரு நடித்த படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு பெரிய ஹீரோ பட வாய்ப்புகள் கிடைத்தன.
இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

ஆடலூ மீக்கு ஜோகார்லு

ஆடலூ மீக்கு ஜோகார்லு

இதை சுகுமார் இயக்குகிறார். இதில், சித்தூர் பகுதியில் வசிக்கும் பெண்ணாக, நடிக்கிறார் ராஷ்மிகா. அடுத்து சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து மேலும் 2 படங்களுக்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.

அதிகமாக சம்பளம்

அதிகமாக சம்பளம்

இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் பட்டியலில் இணைந்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

அனுஷ்கா, நயன்தாரா

அனுஷ்கா, நயன்தாரா

தெலுங்கு சினிமாவில், நடிகைகள் அனுஷ்கா, நயன்தாரா ஆகியோர் ரூ.3 கோடியில் இருந்து ரூ.4 கோடி வரை சம்பளம் கேட்கிறார்களாம். சமந்தா, பூஜா ஹெக்டே ஆகியோர்தான் 2 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகைகளாக இருந்தனர். அந்த ஸ்லிட்டில் இப்போது ராஷ்மிகா மந்தனாவும் புதிதாக இணைந்துள்ளார்.

இன்னும் குறைய

இன்னும் குறைய

இந்த கொரோனா பரவல் காலத்திலும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார் அவர். நடிகை காஜல் அகர்வால், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கும் ஆச்சாரியா படத்துக்கு ரூ.1.5 கோடி மட்டுமே சம்பளம் வாங்கியுள்ளார். இப்போது திருமணம் முடிந்துவிட்டதால், அவர் சம்பளம் இன்னும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X