ஹைதராபாத்தில் இரவு நேர படப்பிடிப்பு பணிகள்.. படக்குழுவுடன் இணையவுள்ள ராஷ்மிகா!

சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் திரைப்படம் புஷ்பா.

இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வில்லனாக ஃபகத் பாசில் நடிக்கிறார்.

இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ள இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

அல்லு அர்ஜுன் அலா வைகுந்தபுரம்லோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் நடித்து வருகிறார். சுல்தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஷ்மிகா இந்த படத்தில் நடிக்கிறார். ரங்கஸ்தலம் படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பெரிய பட்ஜெட்

பெரிய பட்ஜெட்

இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு வனப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் மொத்தமாக ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 13 வெளியீடு

ஆகஸ்ட் 13 வெளியீடு

ஆந்திரப் பிரதேச வனப்பகுதிகளில் நடைபெறும் செம்மரத் திருட்டைச் மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு முன்னரே தெரிவித்தது. பாகம் இரண்டு அடுத்த வருடம் வரவுள்ளது.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு

ராஷ்மிகா Good bye படத்தில் நடித்து முடித்த கையோடு புஷ்பா படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் இரவு நேர படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சூழ்நிலை சரியாக அமைந்தால் திட்டமிட்டபடி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X