தளபதி விஜய்யுடன் எப்போது நடிப்பீங்க… ரசிகர் கேட்ட கேள்வி... ராஷ்மிகா என்ன சொன்னாங்க தெரியுமா?

சென்னை: தளபதி விஜய்யுடன் விரைவில் நடிக்க இருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தானா கூறியுள்ளார்.

Ask me anything என்ற கேள்வி பதிலில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த பதிலால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனவுக்கன்னி

கனவுக்கன்னி

பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வரும் நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் இணைந்து நடித்த "கீதா கோவிந்தம்" மற்றும் "டியர் காம்ரேட்" இவரின் ரசிகர் கூட்டத்தை மட்டும் அதிகரிக்காமல் திரைத்துறையில் இவரது மார்க்கெட்டையும் உயர்த்தி தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருக்கிறார் ராஷ்மிகா.

தமிழில் ரசிகர்கள்

தமிழில் ரசிகர்கள்

கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருந்தார். கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை திருப்திபடுத்தினார். தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.

தளபதி விஜய்யுடன் நடிப்பீங்களா

தளபதி விஜய்யுடன் நடிப்பீங்களா

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, தனது ரசிகர்களுடன் Ask me anything என்ற கேள்வி பதிலில் கலந்துகொண்டார். அப்போது, ரசிகர் ஒருவர் நீங்கள் தளபதி விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு ராஷ்மிகா விரைவில் என்று பதிலளித்துள்ளார். மேலும், தளபதி விஜய் குறித்து ஒருவார்த்தையில் பதில் சொல்லுங்க என்பதற்கு Love என்று கூறியுள்ளார்.

குட்பை இந்தி படத்தில்

குட்பை இந்தி படத்தில்

அல்லு அர்ஜுன் குறித்தும் விஜய் தேவரகொண்டா பற்றியும் பல சுவாரசியமான பதிலை கூறியுள்ளார். தற்போது இவர் புஷ்பா படத்திலும், மஞ்சு மிஷன் மற்றும் குட்பை என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்காக இவர் மும்பையில் வசித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X