விஜய்க்காக அப்பாவிடம் சண்டை போட்டிருக்கேன்.. தளபதி 66 படம் குறித்து வெளிப்படுத்திய ராஷ்மிகா!

சென்னை : விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வருகிறது தளபதி 66 படம். வம்சி படிப்பள்ளி படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக இணைந்துள்ளார். படத்தின் பூஜையின்போதே அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.

தளபதி 66 படம்

தளபதி 66 படம்

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாவது கட்ட சூட்டிங் சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

விஜய் பிறந்தநாளில் டைட்டில்

விஜய் பிறந்தநாளில் டைட்டில்

படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியிட தயாரிப்பாளர் தில் ராஜூ திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரக்டர் குறித்து ராஷ்மிகா

கேரக்டர் குறித்து ராஷ்மிகா

படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில் படத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்து பிலிம்பேர் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ராஷ்மிகா வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் தனக்கு மிகவும் வலிமையான கேரக்டர் என்று அவர் கூறியுள்ளார்.

வலிமையான கேரக்டர்

வலிமையான கேரக்டர்

தனக்கும் தன்னை சேர்ந்த தன்னுடைய குடும்பத்தினருக்காகவும் எப்போதும் துணைநிற்கும் கேரக்டரில் தான் நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யுடன் ஜோடி சேர்ந்தது குறித்து ராஷ்மிகா மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். தனது கனவு நனவான தருணம் இது என்றும் அவர் கூறிவருகிறார்.

விஜய்யின் ரசிகை

விஜய்யின் ரசிகை

எப்போதுமே தான் விஜய்யின் ரசிகையாக இருந்ததாகவும் தற்போது அவருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாகவும், சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய தோழியின் திருமணத்தில் இதுகுறித்து பேசி மகிழ்ந்ததாகவும் ராஷ்மிகா மேலும் கூறியுள்ளார்.

உற்சாகமான ராஷ்மிகா

உற்சாகமான ராஷ்மிகா

இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றபோது ராஷ்மிகா மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். ஒரு சாதாரண ரசிகையின் மனோபாவம் அவரிடம் காணப்பட்டது. விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அவர் ஆர்வம் காட்டினார். மேலும் விஜய்க்கு திருஷ்டி சுற்றிப் போட்டதையும் காண முடிந்த

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X