Don't Miss!
- News மோடி, அமித் ஷா மேடை மேடையாக பேசியதை! ஒரே பேச்சில் புரட்டி போட்ட ப்ரியங்கா! காங்கிரஸின் மாஸ்டர்பிளான்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கார்த்தியுடன் மீண்டும் இணையும் ராஷ்மிகா?... தேடிப் போகும் பிரம்மாண்ட படங்களின் வாய்ப்பு…
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் வந்தியத்தேவன் கேரக்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வனை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடிக்கிறார் கார்த்தி.
ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன வந்தியத்தேவன் கார்த்தி.. அந்த பிரச்சனை கிளப்பிய நெட்டிசன்கள்!
பாராட்டைப் பெற்ற வந்தியத்தேவன்
தமிழில் முன்னணி நடிகரான கார்த்தி, இப்போது ரொம்பவே பரபரப்பாக காணப்படுகிறார். ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தியின் வந்தியத்தேவன் கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் கார்த்தியின் நடிப்பை பாராட்டியுள்ளனர். கார்த்தியின் கேரியரில் பொன்னியின் செல்வன் ஒரு மைல்கல் என பார்க்கப்படுகிறது.
தீபாவளி ரேஸில் சர்தார்
விருமன், பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து தீபாவளிக்கு கார்த்தியின் 'சர்தார்' திரைப்படமும் வெளியாகிறது. செப்டம்பர் 29ம் தேதி சர்தார் படத்தின் டீசரும் வெளியாகி வைரலானது. ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், கார்த்தி சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கோப்ரா படத்தில் விக்ரமின் கேரக்டர் எப்படி இருந்ததோ, அதேபோல் சர்தார் படத்தில் கார்த்தியின் ரோல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கார்த்தியுடன் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
அடுத்து ராஜூமுருகனின் ஜப்பான்
சர்தார் படத்தின் ப்ரோமோஷன் முடிந்ததும், 'ஜப்பான்' படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தியின் 24வது படமாக உருவாகவுள்ள இதனை, ராஜூ முருகன் இயக்கவுள்ளார். குக்கூ, ஜிப்ஸி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ராஜூ முருகன், முதன்முறையாக கார்த்தியுடன் இணைகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இப்போது அவருக்குப் பதிலாக புஷ்பா'வில் வில்லனாக மிரட்டிய சுனில், இந்த படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
கார்த்தியுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா
'ஜப்பான்' படத்தின் டைட்டில் உட்பட எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, இப்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் கார்த்தியுடன் 'ஜப்பான்' படத்தில் ராஷ்மிகா மந்தனா இணையவுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பின்னர் பெரிய பட்ஜெட் படங்களின் நாயகியாக ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருவது முன்னணி ஹீரோயின்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு