Rashmika: அநியாயம் பண்றீங்க பா.. ஆலியா பட் கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த ராஷ்மிகா!
சென்னை: ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி உள்ள அனிமல் திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிர்க் பார்ட்டி என்ற படத்தின்மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.

காந்தாரா படப்புகழ் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ராஷ்மிகாவிற்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.
ராஷ்மிகா மந்தனா: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கீதா கோவிந்தம் படம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று ராஷ்மிகாவிற்கு சிறப்பாக கைகொடுத்தது.
பான் இந்திய நடிகை: தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார் ராஷ்மிகா. இதையடுத்து, விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாகியிருந்தார். இந்தப் படங்கள் தமிழிலும் ராஷ்மிகாவிற்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது. இந்தப் படங்களின் வெற்றி இவரை இந்திய அளவில் பான் இந்தியா நாயகியாக மாற்றியுள்ளது.
அனிமல்: தற்போது இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா. அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது.
ரொமான்டிக் போஸ்டர்: டீசர் வெளிவந்ததை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான அறிவிப்பாக ரன்பீர் கபூர் - ராஷ்மிகா இருவரும், ரொமான்டிக் முத்த காட்சி போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. அதை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், என்ன ராஷ்மிகா இதெல்லாம் என்றும், பாலிவுட்டுக்கு போனா இப்படியா? என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த லிப் லாக் போட்டோ இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











