ரஷ்மிகா மந்தனா, சர்வானந்த் இணைந்து நடிக்கும் "ஆடவாலு மீகு ஜோஹர்லு" படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை : இந்தியாவின் நேஷ்னல் க்ரஷ் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா

தெலுங்கு சினிமாவைத் தொடர்ந்து தமிழிலும் அறிமுகமான இவருக்கு இப்போது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிகிறது

இந்த நிலையில் சர்வானந்த், ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள "ஆடவாலு மீகு ஜோஹர்லு" படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது

தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்

தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்

தென்னிந்தியாவை ஒரு கலக்கு கலக்கி இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. குறிப்பாக தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் 15 நடித்த இரண்டு திரைப்படங்களும் பேக் டு பேக் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் என விஜய் தேவரகொண்டா,ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் வெளியான படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி ஹீரோவாக நடித்த சுல்தான் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது

அமிதாப்பச்சனுக்கு மகளாக

அமிதாப்பச்சனுக்கு மகளாக

தென்னிந்தியாவை ஒரு கலக்கு கலக்கிய ரஷ்மிகா மந்தனாவுக்கு இப்பொழுது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக மிஷன் மஞ்சு என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு மகளாக குட் பாய் என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார். படப்பிடிப்புக்காகவே மும்பையிலேயே தனியாக வீடு வாங்கி அங்கேயே தங்கி நடித்து வருகிறார்

ஆடவாலு மீகு ஜோஹர்லு

ஆடவாலு மீகு ஜோஹர்லு

இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சர்வானந்த் ஜோடியாக "ஆடவாலு மீகு ஜோஹர்லு" என்ற படத்தில் நடித்து வருகிறார். எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை கதை உள்ளிட்ட சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமடைந்த நடிகர் சர்வானந்த் இப்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். சர்வானந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது

அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி

அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி

இந்த நிலையில் தற்போது குடும்ப உறவுகளைப் பற்றி பேசும் அழகிய திரைப்படமாக ஆடவாலு மீகு ஜோஹர்லு என்ற படம் தயாராகி உள்ளது. சென்ற வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது. இயக்குனர் திருமலா கிஷோர் இயக்கியிருக்கும் இந்த படத்தை எஸ்எல்வி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மிக நீண்ட காத்திருப்புக்கு பிறகு இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 25 ஆம் தேதி ஆடவாலு மீகு ஜோஹர்லு திரையரங்குகளில் வெளியாகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X