டயானா கெட்டப்பில் கலக்கும் முன்னணி நடிகைகள்.. ஒரே நேரத்தில் வெளியான போட்டோ.. குழம்பிய ரசிகர்கள் !

ஹைதராபாத் : திரைப்படங்களில் நடித்து வரும் ஒவ்வொரு கதாநாயகிகளும் தங்களுக்கான தனி ஸ்டைல் ஒன்று வைத்துக் கொண்டு அதில் பயணித்துக் கொண்டு இருப்பார்கள். ஒரு சிலர் கிளாமர் பாதையும் மற்றும் சிலர் குடும்பப்பாங்கான பாதையும் தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்று வருகின்றார்.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வரும் நடிகைகளில் ரஷ்மிகா மந்தனா மற்றும் சுரபி என இருவருக்குமே தனி இடம் உண்டு.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு புகைப்படம் ஒன்று ஒரே சாயலில் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்

எக்ஸ்பிரஷன் குயின்

எக்ஸ்பிரஷன் குயின்

கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ந்து வரும் ஒரு சில ஹீரோயின்களுக்கு நடுவில் இவர் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியை கையில் எடுக்காமல் தனது க்யூட்டான எக்ஸ்பிரஷினாளும், வசீகரிக்கும் அழகாலும், ரசிக்க வைக்கும் நடிப்பாலும் தொடர்ந்து முன்னணி நாயகியாக இருந்து வருபவர் ரஷ்மிகா மந்தனா. இவர் தற்போது நடித்து வெளியான சரிலேரு நீக்கேவ்வரு என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுடன் முதன்முதலாக நடித்து தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்டவர்.

கவர்ச்சி கதாபாத்திரம்

கவர்ச்சி கதாபாத்திரம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஷ்மிகா. இப்போதுள்ள நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகைகளில் இவர் தான் முன்னணியில் இருக்கிறார். தங்களது படங்களில் கவர்ச்சியை காட்டி நாளுக்கு நாள் ரசிகர்கள் பலத்தை கூட்டி வரும் ஒரு சில ஹீரோயின்களுக்கு மத்தியில் இவர் அந்த மாதிரி கதாபாத்திரங்கள் எதுவும் செய்யாமல் தனது கண்ணசைவினாலேயே அனைத்து ரசிகர்களையும் கிளீன் போல்ட் ஆக்கி வருகிறார்.

உள்ளூர் டயானா

உள்ளூர் டயானா

இந்நிலையில் இவர் தனது கியூடான புகைப்படங்களை இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில் தற்போது இளவரசி போன்ற ஒரு கெட்டப்பில் சிகப்பு நிற உடையில் சிரித்த முகத்துடன் உள்ள ஒரு வடிவான த்ரோபேக் புகைப்படத்தை இப்போது வெளியிட்டார். அனைவரும் அதை பார்த்து ரசித்து கொண்டிருந்த வேளையில் தற்போது மற்றொரு ஹீரோயினும் அதேபோல் உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

பல விருதுகள்

பல விருதுகள்

தமிழ், தெலுங்கு என மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டு இருப்பவர் நடிகை சுரபி இவர் தமிழில் முதன்முதலில் விக்ரம் பிரபுவுடன் இவன் வேற மாதிரி என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பல விருதுகளை தட்டிச் சென்றார். பார்க்க மிகவும் லட்சணமான முகம், அடக்கமான பண்பு, சாதுவான குணம் என எப்போதும் கவர்ச்சி இல்லாத நல்ல கதாபாத்திரங்கள் என தனது ரூட்டை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார். தற்போது வீட்டில் உள்ள நேரத்தில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து அதை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பதிவிட்டு வரும் இவர் தற்போது பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரஷ்மிகா போன்று

ரஷ்மிகா போன்று

அதில் உலகப்புகழ்பெற்ற இளவரசி டயானா போன்று ஒரு தொப்பியை அணிந்து கொண்டு வெட்கப்பட்டு தலை குனிந்துள்ள அந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை போன்று ரஷ்மிகாவும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இருவரின் புகைப்படமும் ஒரே நேரத்தில் சில நிமிட இடைவெளியில் அப்லோடு செய்யப்பட்டதால் இருவரது ரசிகர்களும் குழம்பி வருகின்றனர். சுரபி மற்றும் ரஷ்மிகா என இருவரும் தங்களுக்கான தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு வெற்றி நடை போட்டு வருகின்றனர். இதற்கிடையில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரி டயானா சாயலில் புகைப்படங்களை பதிவிட்டு இருவரில் யார் டயானா தோற்றத்தில் அழகாக உள்ளோம் என மறைமுகமாக கேட்கும் தோரணையில் இருப்பதாக சிலர் முனுமுனுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X