சர்ச்சையில் சிக்கிய பாடல்.. சாவா படத்திற்கு எழுந்த கண்டனம்.. ராஷ்மிகா பாடல் காட்சி நீக்கம்!

சென்னை: இந்திய அளவில் அதிகமாக ரசிகர்களை கொண்டுள்ள நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர், சல்மான்கானுடன் ஜோடி போட்டு சிக்கந்தர் படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக குபேரா" படத்திலும் நடித்து வருகிறார்.மேலும், சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் புராணக்கதையான சாவாவில் நடித்துள்ளார். இப்படம் வரும் பிப்ரவரி 14ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சாவா படத்தின் பாடல் காட்சி சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்பட்டுள்ளது.

லக்‌ஷ்மன் உடேகர் இயக்கி உள்ள இப்படத்தில் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா, நாயகி. அக்‌ஷய் கன்னா, அசுதோஷ் ராணா, திவ்யா தத்தா என பலர் நடித்துள்ளனர். சத்ரபதி சாம்பாஜி மகாராஜின் புராணக்கதையில் விக்கி கவுஷல் மராட்டிய மன்னராக நடித்து இருக்கிறார். மன்னரின் மனைவி மகாராணி யேசுபாய் வேடத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். அண்மையில் இப்படத்தின் டிரைலர் மகாராஷ்டிராவின் பாரம்பரிய நாட்டுப்புற நடன வடிவமான 'லெஜிம்' இசைக் கருவியை வாசித்தபடி விக்கி கவுசலும் ராஷ்மிகா மந்தனாவும் ஆடும் காட்சி இடம் பெற்று இருந்தது. இந்த காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், படத்தைத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

rashmika mandanna drop

சாவா பாடலுக்கு எதிர்ப்பு: மேலும், சத்ரபதி சிவாஜியின் பரம்பரையை சேர்ந்த சம்பாஜி ராஜே, 'லெஜிம்' வாசிப்பதைக் காட்டியதில் தவறு இல்லை. ஆனால், சத்ரபதி சம்பாஜி மகாராஜ் நடனமாடுவதாகக் காட்டுவது தவறாக உள்ளது என்றார். அதே போல, மகாராஷ்டிர அமைச்சர் உதய் சமந்தும், இந்த படத்தை முதலில் வரலாற்று ஆய்வாளர்களுக்குக் திரையிட்டு காட்டிய பிறகு தான் படத்தை வெளியிட வேண்டும் மகாராஜின் கவுரவத்துக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.

rashmika mandanna drop

பாடல் நீக்கம்: இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை சந்தித்த படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மன் உடேகர், லெஜிம் நடனம் சத்ரபதி சம்பாஜி மகாராஜை விட பெரியதல்ல, அதனால் அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்குகிறோம் என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து, சாவா படத்திற்கு எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இப்படம் பிப்ரவரி 14ந் தேதி காதலர் தினத்தன்று தியேட்டரில் வெளியாக உள்ளது.

rashmika mandanna drop

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X