ராஷ்மிகாவின் ரகசிய காதல்.. போட்டோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
சென்னை: ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாக பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த விஷயம் குறித்து இருவரும் வாய் திறக்காமல் இருக்கும் நிலையில், இருவரும், மதிய உணவு சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்த இணையவாசிகள் இவர்கள் ரகசியமாக காதலித்து வருகின்றனர் என கூறி வருகின்றனர்.
ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா இருவரும் ஜோடியாக கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில், ராஷ்மிகாவின் க்யூட்டான எக்ஸ்பிரஷன் அனைவருக்கும் பிடித்து இருந்ததால் அவர் அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக மாறி விட்டார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இருவரும் சேர்ந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற முத்தக்காட்சி மட்டும், பல ரசிகர்களால் ரிப்பீட் மோடில் பார்க்கப்பட்டது. அந்த படத்திலும் இவர்களின் கெமிஸ்டிரி பக்காவான இருந்தது.

ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா: இந்த இரண்டு படங்களுக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை என்றாலும் இருவரும் காதலித்து வருவதாகவும், டேட்டிங் செல்வது, ஊர் சுற்றுவதுமாக சோஷியல் மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என்று கூறினாலும், இணையவாசிகள் இவர்களை விடாது துரத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய்தேவரகொண்டா மாலத்தீவு சென்றருந்தார். அதே போல ராஷ்மிகாவும் மாலத்தீவு சென்றார். இருவரும் மாலத்தீவுக்கு தனித்தனியாக விமானத்தில் சென்றனர்.
ஆனால், ராஷ்கா விஜய் தேவரகொண்டாவின் கூலரை போட்டுக்கொண்டு போட்டோ எடுத்திருந்தார். இதைப்பார்த்த, ரசிகர்கள் மும்பை விமானநிலையத்திற்கு விஜய்தேவரகொண்டா கூலர் போட்டோவை போட்டு இருவரின் காதலை அம்பலப்படுத்தினர்.
வெளியான போட்டோ: தற்போது, ராஷ்மிகா மதிய உணவு சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்து இருந்தார். அந்த போட்டோவில், ராஷ்மிகா நீல நிற டேங்க் டாப் அணிந்திருந்தாள். ஆனால், உண்மையில் அவர், விஜய் தேவரகொண்டாவுடன், அதே நீல நிற உடையில் உணவு சாப்பிடும் போட்டோவை ஷேர் செய்து இவர்களின் ரகசிய காதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது, விஜய்தேவரகொண்டாவின், VD 12 படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. அங்கு எடுக்கப்பட்ட போட்டோ தான் இது என இணையவாசிகள் கூறிவருகின்றனர்.

நான் தனியாக இல்லை: ராஷ்மிகாவும் விஜய்யும் காதலிப்பதை ஒத்துக்கொள்ளாமல் ரகசியமாக வைத்து இருக்கின்றனர். அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு விஜய்தேவரகொண்டா பேட்டி அளித்தார். அதில், ஒரு சக நடிகருடன் டேட்டிங் செய்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ம்ம்ம் டேட்டிங் சென்று இருக்கிறேன், எனக்கு இப்போது 35 வயதாகிறது, நான் தனியாக இருப்பேன் என்று நினைக்கிறீர்களா? என்ற விஜய் தேவகொண்டா, காதலிப்பதற்கு முன்பு, வலுவான நட்பை வளர்த்துக் கொள்ளவே விரும்புகிறேன். ஒருவரைப்பற்றி நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான், அவர்களுடன் காதலை வளர்த்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.
கைவசம் உள்ள படம்: நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது புஷ்பா: தி ரூல் படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில ஆண்டுகளாகன நடைபெற்று அண்மையில் முடிவடைந்தது. இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. அதே போல விஜய் தேவரகொண்டா ஜெர்சி படத்தின் மூலம் பிரபலமான கௌதம் தின்னனுவின் படத்தில் நடிதது வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக VD 12 என்று பெயரிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











