ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்.. ஹல்தி, மெஹந்தி எப்போ தெரியுமா?.. கொண்டாட்டம் களைகட்டப்போகுது
ஹைதராபாத்: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் வரும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள். உதய்பூரில் இருக்கும் அரண்மனை ஒன்றில் அவர்கள் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் தாஜ் நட்சத்திர ஹோட்டலில் ரிசப்ஷன் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அவர்கள் திருமண கொண்டாட்டம் பற்றி புதிய விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன.
ரக்ஷித் ஷெட்டியுனான பிரேக்கப்பிற்கு பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா; நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்தார். இரண்டு பேரும் சேர்ந்து நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அவர்கள் தங்களது காதலை ரகசியமாகவே வைத்திருக்க முயற்சித்தார்கள். ஆனால் ஒன்றாக அவுட்டிங் சென்றபோதெல்லாம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லீக்காகி; அவர்கள் காதலை உறுதி செய்தன. அதனையடுத்து ராஷ்மிகாவும் சில மேடைகளில் தன்னுடைய காதலை ஒத்துக்கொண்டார்.
திருமணம்: நீண்ட நாட்கள் காதலித்துவந்த அவர்கள் கடந்த வருடத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள். அதனையடுத்து வரும் 26ஆம் தேதி உதய்பூரில் வைத்து திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். இந்தத் திருமண செய்தி இரண்டு பேரின் ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சினிமாவில் தாங்கள் ரசித்த ஜோடி இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணையப்போவதை கண்டு வாழ்த்து மழையை பொழிந்துவருகிறார்கள்.

திருமணத்தில் யார் யார்?: இந்தத் திருமணத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி, நடிகர்கள் சல்மான் கான், அல்லு அர்ஜுன், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, கரண் ஜோஹர், நடிகை கீர்த்தி சனோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இவர்களது திருமணத்தை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் ஸ்ட்ரீம் முயற்சி செய்ததாகவும்; ஆனால் திருமண நிகழ்வுகள் வியாபாரத்துக்கு அல்ல என விஜய் தேவரகொண்டா மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.
ரிச்சான பத்திரிகை: அதுமட்டுமின்றி திருமணத்தில் கலந்துகொள்பவர்கள் மொபைல் ஃபோனை பயன்படுத்தவும் மணமக்கள் தடை விதித்திருக்கிறார்களாம். இப்படி தங்களது திருமணம் தொடர்பான விஷயங்களை பார்த்து பார்த்து செய்துவரும் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும்; அழைப்பிதழையும் செம ரிச்சாக உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களது திருமண அழைப்பிதழ் பெட்டியில், மஞ்சள் நிற அமரில்லிஸ் மலர்கள், பிங்க் நிற லில்லிகள் இருக்கின்றன. மேலும், நேஷனல் க்ரஷ் என்ற ராஷ்மிகாவின் பட்டத்தோடு எழுதப்பட்ட பர்ஃப்யூம், விஜய் தேவரகொண்டாவை குறிக்கும் வகையில் ரவுடி என எழுதப்பட்ட மஞ்சள் நிற டி- ஷர்ட், ஆயுர்வேத க்ரீம், முந்திரி பருப்பு கொண்ட சின்ன பெட்டியும் இருக்கின்றன
கொண்டாட்டம் எப்போது ஆரம்பம்: இந்நிலையில் அவர்களது திருமணம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அவர்களது திருமணத்தில் ஹல்தி கொண்டாட்டம் 24ஆம் தேதியும், மெஹந்தி கொண்டாட்டம் 25ஆம் தேதியும் நடக்கவிருக்கின்றனவாம். இதனையொட்டி இப்போதிருந்தே இரண்டு பேரின் வீடுகளும் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்க ஆரம்பித்திருக்கின்றன. மேலும் திருமணத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வெளிநாடுகளில் இருந்து பவுன்சர்களை அவர்கள் இறக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications