Don't Miss!
- News
''எலக்ஷன் ஸ்பெஷலிஸ்ட்''.. ஈரோடு கிழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு கிடைத்த புதிய அடைமொழி!
- Finance
அதானி பங்குகள் வர்த்தக தற்காலிக சஸ்பெண்ட்.. Trading Stop அளவீட்டை எட்டியது..!
- Automobiles
இன்னோவாலாம் இனி வேஸ்ட் இனிமே இந்த கார்தான் பெஸ்ட்னு நினைச்சுட்டாங்க போல! புக்கிங் கண்ட மேனிக்கு குவியுது
- Technology
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தென்னிந்திய படங்களில் ஐட்டம் சாங்ஸ்... மட்டம் தட்டிய ராஷ்மிகா... பாலிவுட்டுக்கு மட்டும் ஜால்ராவா?
மும்பை: விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக டோலிவுட் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இவர் பாலிவுட்டிலும் மிஷன் மஜ்னு என்ற படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மிஷன் மஜ்னு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா மந்தனா பேசியது சர்ச்சையாகியுள்ளது.
விஜய் மாஸ் ஹீரோ... ஆனா அந்த விசயத்துல அஜித் தான் டாப்: மாறி மாறி பேசிய வாரிசு பட நடிகர்!

சாண்டல்வுட் முதல் பாலிவுட்
கன்னடத்தில் 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. முதல் மூன்று படங்களும் கன்னடத்தில் வெளியான நிலையில், அதன்பின்னர் டோலிவுட் பக்கம் சென்றார். தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா படங்கள் மூலம் மிகவும் பிரபலமான ராஷ்மிகா, தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் நடித்திருந்தார். ராஷ்மிகாவின் திரைப்படங்கள் தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்ததால், பாலிவுட்டில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கின.

விஜய்யுடன் ஜோடி - தொடரும் சர்ச்சை
விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள வாரிசு படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா. இந்தப் படம் கோலிவுட்டில் அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் நடித்திருந்த குட்பை திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும் அவர் லீடிங் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஐட்டம் சாங்ஸ் மட்டும் தான் வருது
இந்த விழாவில் பேசிய ராஷ்மிகா, தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா சாங்ஸ், ஐட்டம் பாடல்கள் போன்ற டான்ஸ் மோடில் தான் பாடல்கள் வருகின்றன எனக் கூறியுள்ளார். மேலும், பாலிவுட்டில் தான் மெலடியான ரொமாண்டிக் பாடல்கள் வருகின்றன. மிஷன் மஜ்னு படத்தில் அப்படி நான் எதிர்பார்த்த ரொமாண்டிக் சாங் உள்ளது. அதனை கேட்க நான் ஆவலாக உள்ளேன், நீங்களும் கண்டிப்பாக கேட்டுப் பாருங்கள் என பேசினார். ராஷ்மிகாவின் இந்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.

நெட்டிசன்கள் விளாசல்
தென்னிந்திய திரைப்பட பாடல்களை மட்டம் தட்டிவிட்டு, பாலிவுட் பாடல்களுக்கு ஜால்ரா அடித்த ராஷ்மிகாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இவர் செல்லும் இடமெல்லாம் நேரத்துக்கு தகுந்தாற்போல் பேசுவதாகவும், கொஞ்சம் கூட பொறுப்புணர்வே இல்லையென்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், ராஷ்மிகாவின் ஆரம்ப காலங்களில் கன்னடம், தெலுங்கு மொழிகளில் அவருக்கு சூப்பரான மெலடி பாடல்கள் வெளியானதாகவும், ஆனால், அதையெல்லாம் நினைவில் இல்லாமல் பேசுவதாகவும் விளாசியுள்ளனர். சமீபத்தில் தான் கன்னட திரையுலகம் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கினார் ராஷ்மிகா. இப்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.