உண்மையான காதல்னா அது விஜய் தேவரகொண்டா காதல்தான்.. புருஷனை விட்டுக்கொடுக்காத ராஷ்மிகா மந்தனா

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் வெகு சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றது. ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்து அதற்கு மிகவும் அழகாக கேப்ஷனும் இட்டுள்ளார்.

அதாவது, "எனது அன்பிற்குரியவர்களே, இதோ எனது உலகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். எனது கணவர் மிஸ்டர் விஜய் தேவரகொண்டா. உண்மையான காதல் என்றால் என்ன என்று எனக்குப் புரிய வைத்தவர் விஜய் தேவரகொண்டா தான். மன அமைதி என்பது எப்படி இருக்கும் என்று எனக்கு உணரவைத்தவர் எனது கணவர் விஜய் தேவரகொண்டா தான்.

Rashmika Mandanna Emotional Post About Vijay Deverakonda With Their Wedding Photos

புத்தகம் எழுதவே தயார்: பெரிய கனவுகளைக் காண்பது தவறில்லை என்று ஒவ்வொரு நாளும் எனக்குத் தைரியம் அளித்தவர். என் கற்பனைக்கும் எட்டாத உயரங்களை என்னால் அடைய முடியும் என்று என்னைத் தொடர்ந்து நம்ப வைத்தவர் எனது காதல் கணவர் விஜய் தேவரகொண்டா. யார் பார்க்கிறார்கள் என்ற கவலைப்படாமல், நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் ஆடுவதற்குக் கற்றுக்கொடுத்தவர். நண்பர்களுடன் பயணம் செய்வதே வாழ்க்கையின் ஆகச்சிறந்த விஷயம் என்பதை உணர வைத்தவரும் அவர்தான். இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும்.

காரணமே நீதான்: நான் எப்படிப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டேனோ, அப்படி மாறியிருக்கிறேன். அதற்கு முழு முதல் காரணம் விஜய் தேவரகொண்டா தான். நான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள். விஜ்ஜூ... உன் மேல எனக்கிருக்கும் காதலை விவரிக்க எனக்கு எப்போதுமே வார்த்தைகள் போதாது. அதை நான் உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால், இன்று திடீரென எனது வெற்றிகள், போராட்டங்கள், மகிழ்ச்சி, துக்கம், வாழ்க்கை என எல்லாமே ஒரு அர்த்தம் உள்ளதாகத் தெரிகிறது. அதற்கு காரணம், இவை அனைத்திற்கும் சாட்சியாகவும், எனது வாழ்வின் மிகப்பெரிய அங்கமாகவும் நீ இருப்பதுதான்.

Rashmika Mandanna Emotional Post About Vijay Deverakonda With Their Wedding Photos

சந்தோஷம்: உன்னுடைய மனைவியாக போகிறேன் என்பதை நினைக்கும் போது எனக்கு ஏகப்பட்ட சந்தோஷமாக இருக்கிறது. இனி நம் வாழ்க்கையில் கொண்டாட்டம்தான். வா... இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த வாழ்க்கையை நாம் இணைந்து வாழ்வோம். ஐ லவ் யூ" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவைப் பார்த்த பலரும் ராஷ்மிகா மந்தனா தனது கணவர் விஜய் தேவரகொண்டாவை விட்டுக் கொடுக்காமல் புகழ்கிறாரே என்று பாராட்டி வருகிறார்கள். மேலும் சிலரோ ராஷ்மிகா என்னங்க வைரமுத்து மாதிரி பாட்டே எழுதிட்டாங்க என்றும் கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X