Rashmika Mandanna - இப்போதும் டச்சில்தான் இருக்கிறோம்.. ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் ஓபன் டாக்
ஹைதராபாத்: Rashmika Mandanna (ராஷ்மிகா மந்தனா) நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து அவரது முன்னாள் காதலர் மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது.

தெலுங்கில் ராஷ்மிகா: விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.
தமிழில் ராஷ்மிகா: தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
நேஷனல் க்ரஷ்: தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள்.
விஜய் தேவரகொண்டா: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் காதலில் இருப்பதாகவும், இருவரும் பலமுறை மாலத்தீவுக்கு ஒன்றாக சென்றதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து அதனை ராஷ்மிகா மந்தனா திட்டவட்டமாக மறுத்தார். இதற்கிடையே அவர் நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாகவும் இருந்தது.
டச்சில் இருக்கிறோம்: ஆனால் சில காரணங்களால் அவர்களது திருமணம் நடக்கவில்லை. இதனையடுத்து ராஷ்மிகா படு பிஸியாகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய ரக்ஷித்ஷித் ஷெட்டி,"நானும் ராஷ்மிகா மந்தனாவும் தற்போதுகூட மெசேஜ் செய்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். படங்கள் வெளியாகும்போது ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளத்தான் செய்வோம். அவருக்கு திரையுலகில் பல கனவுகள் இருக்கின்றன. அதை சரியாக புரிந்துகொண்டு இப்போது நேஷனல் க்ரஷ் ஆகியிருக்கிறார்'' என்றார்.


Click it and Unblock the Notifications











