Rashmika Mandanna - என்னது முத்த காட்சிக்கு கூடுதல் பணமா?.. விளக்கமளித்த ராஷ்மிகா மந்தனா

ஹைதராபாத்: Rashmika Mandanna (ராஷ்மிகா மந்தனா) முத்த காட்சிக்கு கூடுதல் பணம் கேட்டதாக வெளியான தகவலுக்கு ராஷ்மிகா மந்தனா விளக்கமளித்திருக்கிறார்.

Rashmika Mandanna Explains about Animal Movie Liplock Scenes

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது முதல் படமாக அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டாவுக்கு பல பெண் ரசிகைகளையும் பெற்றுக்கொடுத்தது. மேலும், தமிழில் ஆதித்ய வர்மா எனவும், ஹிந்தியில் கபிர் சிங் என்ற பெயரிலும் ரீமேக்கானது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் சந்தீப்: சந்தீப் ரெட்டி இப்போது ஹிந்தியில் ரன்பீர் கபூரை வைத்து அனிமல் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். குல்ஷன்குமார் மற்றும் டி - சீரிஸ் நிறுவனமும், முராத் கெடானியின் சினி 1 ஸ்டூடியோஸ் மற்றும் பிரனாய் ரெட்டி வான்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றனர்.

பான் இந்தியா படம்: அனிமல் படமானது பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. ராஷ்மிகா மந்தனாவும் இப்போது நேஷனல் க்ரஷ்ஷாக மாறியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் கீதாஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தின் மூலம் ஹிந்தியிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ப்ரீ டீசர்: அனிமல் படத்தின் ப்ரீ டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் இதில் ரன்பீர் கபூர் வித்தியாசமாக இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டனர். குறிப்பாக இதுவரை சாக்லேட் பாய் தோற்றத்திலேயே இருந்த ரன்பீர் கபூர் இதில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக தோன்றியிருந்தார். எனவே ரன்பீர் கபூருக்கும் இந்தப் படம் முக்கியமானதாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். இதனையடுத்து டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

Rashmika Mandanna Explains about Animal Movie Liplock Scenes

முத்த மழை: இந்த சூழலில் சமீபத்தில் படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியானது. அதில் ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் ஏகப்பட்ட லிப்லாக்குகளை செய்துகொண்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயினர். மேலும் அதிக முத்த காட்சிகளில் நடித்ததற்காக அதிக பணத்தை ராஷ்மிகா மந்தனா கேட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியது. இந்நிலையில் அதனை ராஷ்மிகா மந்தனா திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அவர் இதுகுறித்து கூறுகையில், முத்தக் காட்சியில் நடிப்பதற்கு அதிக பணம் கேட்கவில்லை. கதை பிடித்திருந்தால் எந்த மாதிரியான காட்சியில் வேண்டுமானாலும் நடிப்பேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X