3 நொடிகளில் காதலில் விழுந்துட்டேன்...ஓப்பனாக சொன்ன சுல்தான் நாயகி

சென்னை : மிக கடினமான பெருந்தொற்று காலத்தை அனைவரும் எதிர்கொண்டு வருகிறோம். அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றால் பலரும் தங்களின் உறவுகளை பறிகொடுத்து, தவித்து வருகின்றனர்.

கொரோனா அனைவரின் வாழ்க்கை முறையையும் மாற்றி உள்ளது என்றால் மிகையாகாது. அலுவலகம் சென்றவர்கள் தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. நேருக்கு நேராக நடத்தப்பட்ட மீட்டிங்கள் தற்போது ஜும் செயலி வழியாக நடக்கின்றன.

எப்போதும் பிஸியாக ஓடிக் கொண்டிருந்த திரை பிரபலங்கள் பலரையும் வீட்டிலேயே முடக்கி போட்டுள்ளது கொரோனா. இந்நிலையில் மனஅழுத்தம் குறைய பலரும் செல்ல பிராணியுடன் அதிக நேரத்தை செலவிட துவங்கி விட்டனர். அப்படி நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தனது மனம் கவர்ந்த செல்ல பிராணியை சமூக வலைதளம் வழியாக அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

என் செல்லத்தை அறிமுகப்படுத்துகிறேன்

என் செல்லத்தை அறிமுகப்படுத்துகிறேன்

தனது செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ராஷ்மிகா, "ஏய் நண்பர்களே.. இங்கேயுள்ள அனைத்து குழப்பங்களுக்கும் நடுவே .. எனது மகிழ்ச்சியின் எனது மகிழ்ச்சி மூட்டையை கண்டடைந்தேன்.. இது முழு நேரமும் என்னை உற்சாகமாக வைத்திருக்கிறது.. என் செல்லம் ஒன்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் இவள் பெயர் ஆரா...

3 விநாடிகளில் காதலில் விழுந்தேன்

3 விநாடிகளில் காதலில் விழுந்தேன்

3 வினாடிகளில் காதலில் விழுந்தேன் என்று சொல்வார்கள் இல்லையா... இவள் என் இதயத்தை 0.3 மில்லி விநாடிகளில் உருக்கிவிட்டாள்.. எப்படியிருந்தாலும் உங்களைப் தெரிவிக்க விரும்பினேன்! உங்களுக்கு அன்பும் பலமும்!" என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

பக்கத்து வீட்டுப் பெண்

பக்கத்து வீட்டுப் பெண்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த கீத கோவிந்தம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமானவர் ராஷ்மிகா. பிறகு கன்னடத்திலும் புகழ்பெற்ற நடிகையானார். தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி, பக்கத்து வீட்டு பெண் போன்ற உணர்வை தமிழ் ரசிகர்கள் மனதில் ஏற்படுத்தி விட்டார்.

Recommended Video

Kollywood Actress Meaningful Tattoos | Varalakshmi, Varsha, Vanitha, Samantha
பாலிவுட்டில் தடம் பதிக்க திட்டம்

பாலிவுட்டில் தடம் பதிக்க திட்டம்

பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவின் மிஷன் மஜ்னு என்ற படத்தில் நடிக்கிறார். பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பதற்காக மும்பையிலேயே ஒரு வீடும் வாங்கியிருக்கிறாராம் ராஷ்மிகா. ஆரம்பத்தில் ஓட்டல்களில் தங்கி நடித்து வந்த ராஷ்மிகா, தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஆனதும் ஐதராபாத்தில் வீடு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் ராஷ்மிகா பதிவு

வைரலாகும் ராஷ்மிகா பதிவு

சினிமாவில் டாப் ஹீரோயின் என்றாலும் ராஷ்மிகா மந்தனா, சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். ராஷ்மிகா பதிவிடும் அனைத்து ஃபோட்டோக்களும் வீடியோக்களும் உடனே ரசிகர்களை ஈர்த்து வைரலாகி விடும். அந்த வகையில் தற்போது செல்ல நாய்க்குட்டியுடன் ராஷ்மிகா எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களும் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X